பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினேயியல் 9. புடையார் இத்தலைவனுந் தலைவியும் என இவ்வாறு செய்யுள் செய்தலும் இல்லதெனப்படாது உண்மையான் நிகழும் உலகியல் வழக்கேயாம் என்பது பண்டைத் தமிழாசிரியர் துணி பாகும். இக் கருத்திற்கு மாருக இவ்வகத்திணை யொழுக லாற்றை இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப் பட்டது எனக் கூறினர் களவியலுரையாசிரியர். இல்லாத ஒன்றினை நாட்டிச் செய்யுள் செய்தல் ஆகாயப்பூ நாறிற்றென்பது போல மயங்கக் கூறியதாக இகழப்படுமாதலாலும், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யாதாகலானும் ஆசிரியர் தொல்காப்பியனர் இப்புலனெறி வழக்கத்திற்கு அடிப் படையாயமைவது உலகியல் வழக்கம் என இச்சூத்திரத்துக் கூறினமையானும் ஐந்திணையாகிய இவ்வொழுக்கம் மக்கள் வாழ்க்கையாகிய உலகியல் நிகழ்ச்சியையே பொருளாகக் கொண்டதென்பதனை 'மக்கள் நுதலிய அகனைந்திணையும்” என்ற தொடரால் ஆசிரியர் அறிவுறுத்தலானும் இல்லதென்பது தொல் லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்கவென்று மறுத்தார் நச்சினர்க்கினியர். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அகனைந் திணைச் செய்யுளின்கண்ணே அவ்வொழுக்கத்திற்குரியராகச் சொல்லப்படும் தலைமக்கள், நிலப்பெயரும் தொழிற்பெயருமாகிய திணைநிலைப் பெயராற் கூறப்படுவதல்லது இயற்பெயராற் சுட்டிக் கூறப்பெருரென்றும், புறத்திணை யொழுகலாற்றில் அதற்குரிய தலைமக்களது இயற்பெயர் கூறப்படுவதல்லது அகத்திணைக்கண் கூறப்படுதலில்லையென்றும் 57, 58-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். புறத்தினையியல் புறப்பொருளுணர்த்துதலால் புறத்திணை யியலென்னும் பெயர்த்தாயிற்று. புறமாவது அகம்போல ஒத்த அன்புடையார்