பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9á. தொல்காப்பியம் நுதலியபொருள் தன்றென்பதும் "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்தோம்பல்” என ஆசிரியர் கூறுதலாற் புலம்ை. வேந்துறு தொழிலாய் நிகழ்தற்குரிய நிரைகவர்தலை வேந்தன் ஆணை யின்றிப் படைவீரர் தன்னுறு தொழிலாய் நிகழ்த்துதற்கும் உரியர் என்பது பன்னிரு படல நூற்கருத்தாகும். 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்னவிருவகைத்தே வெட்சி” யென்பது பன்னிரு படலம். அரசனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தன்னட்டிலும் பிறநாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்துகொள்ளு தற்குரியர் என அரசியல் நெறிக்கு மாறுபட்ட கருத்தினைக் கூறு வது பன்னிரு படலமாதலின் பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினரென்றல் பொருந்தாது' என்ருர் இளம்பூரணர். நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவாரமும், புறப்பட்ட படைவீரர் ஊர்ப்புறத்தே நற்சொற் கேட்டலும், பகைவர். பக்கத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவரறி யாதபடி அவர் நாட்டின் நிலைமைகளை ஒற்றரால் ஆராய்ந்தறி தலும், பின்னர்ப் பகைவரது ஊர்ப் புறத்தே சூழ்ந்து தங்குதலும் தம்மை வளைத்துக்கொண்ட மறவர்களைக் கொல்லுதலும், அங் குள்ள ஆனிரையைக் கைப்பற்றிக் கொள்ளுதலும், அந்நிரையை மீட்டற்கு வந்தவர்கள் செய்யும் போர்த் தொழிலை விலக்கி மீளு தலும், தாம் கவர்ந்த பசு நிரையை வருந்தாமற் செலுத்துதலும், வழியிடையே எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உளமகிழத் தோன்றுதலும், பசுக்களைத் தம்மூரிற் கொண்டு நிறுத்துதலும், அவற்றைக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்குப் பகுத்திடுதலும் வினைமுடித்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க் குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித்திணை பதின்ைகு துறைகளே யுடையதாகும். இப்பதின்ைகிற்கும் நிரை கோடல் நிரை மீட்டல் என்னும் இரண்டிற்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத் துறைகளாக விரிப்பர் நச்சிஞர்க்கினியர்.