பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை யியல் 97 குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலுமாகிய வேறுபாடு குறித்து வெட்சியெனவும் கரந்தையெனவும் இரண்டு குறிபெறுமென்றும் வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் புறத்திணையியற் சூத்திரம் வெட்சித்திணைக்கு மாருகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துகின்றதென்றும் அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாதலின் வெட்சிப்பாற் பட்டுக் குறிஞ்சிப் புறணுயிற்றென்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக்கெல்லாம் .ெ பா து வா கி ய வழுவேழுமுணர்த்துவது இச்சூத்திரமெனக் கொண்டு அக்கருத்திற்கேற்ப வலிந்தும் நலிந்தும் பொருள் கூறுவர் நச்சிஞர்க்கினியர். மண்ணுசையால் பிறரது சோர்வு நோக்கியிருக்கும் வேந்த ளுெருவன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே தான் அவனை வெல்லுதற்கேற்ற காலம், இடம், வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர் கருதிப் புறப்பட்டுச் சேறல் நாடாள் வேந்தனது கடமையாகும். இக்கடமையினை உளத்துட்கொண்டு, ஒழியாத மண்ணுசையுடைய பகைவேந் தனைப் பொருதழித்தல் கருதி அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித்திணையாகும். அது முல்லையாகிய அகத் திணைக்குப் புறணுகும். காடுறையுலகாகிய முல்லை நிலமும் கார் காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்கேற்ற கருப் பொருளும், வேந்தன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்திருத்த லும் தலைவி அவனைப் பிரிந்திருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒத்தலால் வஞ்சியென்னும் புறத்திணை முல்லையாகிய அகத் திணைக்குப் புறயிைற்று. 'முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ் விரு பெருவேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி