பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 தொல்காப்பியம் துதலியபொருள் என ஒரு குறிபெறும்" என இளம்பூரணரும், "ஒருவன் மண்ணசை யான் மேற்சென்ருல் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென்றுணர்க" என நச்சிஞர்க்கினியரும் கூறுங் கொள்கை தொல்காப்பியனர் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வஞ்சித்திணைக்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தினை நோக்குங்கால் இருபெரு வேந்தருள் ஒருவனே மேற்சேறற்குரியானென்பது நன்கு விளங்கும். வஞ்சித்திணையை இயங்குயடையரவம் முதலாகத் தழிஞ்சி வீருகப் பதின்மூன்று துறைகளாக விரித்துரைப்பர் ஆசிரியர். படையெடுத்துவந்த வேந்தன் பகைவனது அரணைச்சுற்றி வளைத்துக்கொள்ளுதலும் உள்ளேயிருந்த வேந்தன் அவ்வரணை நெகிழவிடாது பாதுகாத்தலுமாகிய அவ்வியல்பினையுடையது உழிஞைத்திணையாம். இது மருதமென்னும் அகத்திணைக்குப் புறஞகும். இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்டவழி எதிர்த்துச் செல்லும் ஆற்றலின்றி மதிலகத்தே அடைத்துக்கொண்டிருந்த அரசனது அரண் பெரும்பாலும் மருதநிலத்தில் அமைந்திருப்ப தாதலாலும் அம்மதிலை வளைத்துக்கொள்ளுதற்கு வந்த வேந் தனும் அந்நிலத்தில் இருத்தலாலும், தலைவன் வாயில் வேண்டத் தலைவி அதற்குடம்படாது கதவடைத்துக்கொண்டு வீட்டினுள்ளே யிருத்தலாகிய மருதத்திணை யொழுகலாற்றைப்போன்று புறத்தே மதிலை வளைத்துக்கொண்ட வேந்தன் அரணுள் நுழைதலை விரும்ப உள்ளிருந்த வேந்தன் அதற்குடம்படாது அரண் கதவினையடைத் திருத்தலாலும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையாலும், அதற்குரிய விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலாலும், புலத்தலும் ஊடலும் மருதத்திணையாதல்போல அரண முற்றியும் விடாது பற்றியும் அகப்புறப்படைகள் தம்முட்