பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணேயியல் 99 பொருதலே உழிஞைத்திணையாதலாலும் உழிஞை மருதமாகிய அகத்திணேக்குப் புறஞயிற்று. 'மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமென்னும் வேறுபாடு குறித்து உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறும் என்பர் இளம்பூரணர். உழிஞைத்துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறையாகத் தொல்காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சி யைத் தனித்ததொரு திணையாகக்கொள்ளுதல் அவர் கருத்தன் றென்பது நன்கு விளங்கும். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க... இக் கருத்தானே'நொச்சி வேலித் தித்தன் உறந்தை (அகநா.122) என்ருர் சான்ருேரும்" எனவரும் நச்சிஞர்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத் தகுவதாம். உழிஞைத்திணைக்குரிய செயல்முறைகள் எட்டுவகைப்படும். அவையாவன: பகைவரது தேயத்தைத் தான் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டியவர்களுக்குக் கொடுத் தலையெண்ணிய வெற்றித்திறமும், அங்ங்ணம் தான் நினைத்தது முடிக்கவல்ல வேந்தனது வலியின் சிறப்பும், அழி வில்லாத மதில்மேலேறிப் போர் செய்தலும், மாற்ருர் எய்யும் அம்புகளைத் தடுத்தற்குரிய தோற்படையின் மிகுதியும், அரணகத் துள்ள வேந்தனது செல்வமிகுதியும், அம்மிகுதியால் தன்னெடு மாறுபட்ட புறத்தோனேப் பொருதுவருத்திய கூறுபாடும், வலி மிக்குத்தாைெருவனுமேயாகிப் புறத்தேபோந்து போர் செய்யும் குற்றுழிஞையும், வெகுண்டு வரும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற்கேற்ற அரிய மதிலின் வன் மையும் ஆகிய இவையாம். இவற்றுள் முன்னைய நான்கும் மதிலே வளத்துக்கொண்ட வேந்தருகிய புறத்தோனுக்குரியன. பின் னுள்ள நான்கும் மதிலழியாமற் காக்கும் அகத்தோனுக்குரிய செயல் முறைகளாம். குடைநாட்கோள் முதல் தொகைநிலை