பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தொல்காப்பியம் நுதலியபொருள் யிருகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் உழிஞைத்திணைக்குரிய துறைகளாகும். தனது வலியினை உலகம் உயர்த்துப் புகழ்தலையே பொரு ளாகக்கருதிப் போர்மேற்கொண்டுவந்த வேந்தனை மாற்று வேந் தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் நிலையில் அவ்விருபெருவேந்தரும் ஒரு களத்துப் போர்செய்தல் தும்பைத்திணை யெனப்படும். தும்பையென்னும் இத்திணை நெய்த லென்னும் அகத்திணைக்குப் புறணுகும். தும்பையென்பது சூடும் பூவினற்பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமனலுலகம்போலக் காடும் மலையும் கழனியுமல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பெரும்பான்மை யுளதாயவாறுபோலக் கணவனையிழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்க மின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள்பற்றி ஒருவரையொரு வர் நோக்கிப் போரின்கண் இரங்குபவாகலானும், ஒருவரும் ஒழியாமற்பட்டுழிக் கண்டோர் இரங்குபவாகலானும், பிற காரணங்களாலும் நெய்தற்குத் தும்பை புறணுயிற்று என்பர் நச்சிஞர்க்கினியர். போர் வீரரது உளத்திண்மையைப் பலரும் அறிய விளக்குஞ் சிறப்புடையது இத்தும்பைத்திணையாம். பலரும் ஒரு வீரனை நெருங்கிப் பொருதற்கு அஞ்சிச் சேய்மையில் நின்று அம்பினல் எய்தும் வேலால் எறிந்தும் போர்செய்ய, அவர்கள் செலுத்தும் அம்பும் வேலும் அவ்வீரனது உடம்பில் செறிவாகத் தைத்தமை யால் உயிர் நீங்கிய அவனது உடம்பு, நிலத்திற் சாயாது நேர் நிற்றலும், வாள்முதலியவற்ருல் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது தறுகண்மை விளங்கும் தலையேயாயினும் உடலேயாயினும் நிலத் தைத் தீண்டாது எழுந்து ஆடுதலும் ஆக இவ்வாறு வியந்து