பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 7 பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூலுக்கு நக்கீரனரால் உரை கண்டு மதுரை உப்பூரிகுடி கிழார் மகளுவான் உருத்திரசன்மனு கிய குமாரசுவாமியால் மெய்யுரை கேட்கப்பட்டது” என்னும் வர லாறு களவியல் உரைமுகத்திற் காணப்படுகின்றது. இச்செய்தியினை நோக்குங்கால், பாண்டியனுற் புரக்கப்பட்ட புலவர்கள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் கற்று வல்லராய்த் தமிழ் வளர்த்து வந்தார்கள் என்பதும், நெடுங்காலம் மழையில் லாமையாற் பாண்டி நாட்டிலேற்பட்ட கொடிய பஞ்சத்தின் காரண மாக அவர்கள் பாண்டி நாட்டைவிட்டு வேறுவேறிடங்களுக்குத் தனித்தனியே பிரிந்து சென்றனரென்பதும், மக்கள் பல்லாண்டு களாகப் பசியால் வாடியநிலையில் கல்வியின்பால் உள்ள வேட்கை குறையவே உயர்ந்த கல்வியாகிய பொருளதிகாரத்தையறிவுறுத் தும் புலவர்களும் தம்பணியில் தளர்வுற்றனர் என்பதும், ஆகவே பாண்டியனுடைய ஏவலாளர் பொருளதிகாரம் வல்லாரைக் கண்டு அழைத்துச் செல்லுவதற்கியலவில்லை யென்பதும், களவியலுரை யாசிரியரால் எழுத்துஞ் சொல்லும் பொருளும் எனக் குறிக்கப் 1. “உலகியல் நிறுத்தும் பொருண் மர பொடுங்க மாறனும் புலவரும் மயங் குறு காலே முந்துறும் பெருமறை முாேத்தருள் வாக்கால் அன்பினேந் திணயென் றறுபது சூத்திரம் கடலமு தெ த்துக் கரையில் வைத்ததுபோற் பரப்பின் றமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள்' எனக் கல்லாடம் மூன்ரும் பாடலில் இவ்வரலாறு குறிக்கப் பெற்ற மை காண்க. - 2. கல்லாடம் முருகவேள் வாழ்த்தில், 'மணிக்கா லறிஞர் பெருங் குடித் தோன்றி இறை யோன் பொருட்குப் பரணர் முதல் கேட்பப் பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும் பாய்பா ரறிய நீயே யாதலின்’ என வருந் தொடரால், முருகன் உப்பூரி குடிகிழார் மகளுவான் உருத்திரசன் மனுகத் தோன்றி இறையனுர் களவியலுக்கு மெய் யுரை கேட்ட செய்தி குறிக்கப்படுதலறிக.