பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 தொல்காப்பியம் நுதலியபொருள் எனவரும் பன்னிரு படலச் சூத்திரத்தாலும் "தென்றிசை யென் றன்வஞ்சியொடு வடதிசை, நின்றெதிருன்றிய நீள்பெருங்காஞ்சி யும்” எனச் செங்குட்டுவன் கூற்ருக இளங்கோவடிகள் கூறுந் தொடராலும் இனிது விளங்கும். இங்ங்னமாகவும் காஞ்சித் திணையென்பதற்குப் பல்வேறு நிலையாமையினைக் கூறுங் குறிப்பு எனத் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் கூறும் விளக்கம், ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்திற்கும் அவர்க்குப் பின்வந்த இளங்கோவடிகள் முதலியோர் கருத்திற்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையென்னும் பெருங் காஞ்சி முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்தநிலை யென்பதிருகவுள்ள பத்துத் துறைகளும் பாங்கருஞ் சிறப்பினைப் பெறுதல் வேண்டுமென்னும் விருப்பத்தைப் புலப்படுத்துவன : மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்தென்பதீருகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியல்பைப் பல்லாற்ருனும் பற்றியொழுகும் துன்பிய லேப் புலப்படுத்துவன. இங்ங்ணம் காஞ்சித்திணைத் துறைகள் இருவகை நிலைகளைக் குறித்தலால் 'நிறையருஞ் சிறப்பிற்றுறை யிரண்டுடைத்து' என்ருர் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத் தும் ஆண்பாற்றுறை. பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைத்தார் நச்சினர்க்கினியர். இவ்விருவகைத் துறைகளை யும் விழுப்பவகை யெனவும் விழுமவகை யெனவும் இருதிறமாகப் பகுத்துரைப்பாருமுளர். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவராற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனேயோ குறிப்பதன்று. புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர் தம்முடைய அறிவு, திரு ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ்