பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தொல்காப்பியம் நுதலியபொருள் வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற மனை வாழ்க்கை யாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த் தலை மக்களுக்குரிய கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணை யென்பது பெறப்படும். பாடானல்லாத பிறவும் புலவராற் பாடப்படுவன வாயினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டுமென்னும் மனக்குறிப்பின்றி ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலிய வற்றைத் தெரிவிக்கும் வகையால் அவை வெட்சி முதலிய திணை களின்பாற்படுவனவென்றும், அச்செயல்களைக் கருவாகக் கொண்டு புலவன் பாடும்போது அவற்ருலுளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத்தலைவன்பால் தோற்றும் உயர்ந்த உள்ளக் குறிப்பு பாடாண்திணையென்றும் பகுத்துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரை யிலுைம் பாட்டினுலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த் துறையிலும் அன்பின்மிக்க மனே வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையே பாடாண்திணை யெனப்படும். அமரகத்து அஞ்சாது போர்புரியும் வீரர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்பவற்ற்ைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறு வகைப் பகுதிகளும், குற்றமற்ற அகத்திணை யொழுகலாற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் உலகியலிற் பலவேறு செயல்வகையினை யுளத்துட்கொண்டு ஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக்கண் பரவிப் போற்றுதலும் முன்னேர் தம் உள்ளத்தே சிந்தித்துணர்த்திய நற்பொருள்களே யறிவுறுத்தலும் என இங்ங்னம் இயல்பு வகையாற் பாடப்பெறும் செந்துறை வண்ணப்பகுதியும் ஆகிய இவையெட்டும் பாடாண் திணையின் வகைகளாம்.