பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் 109 ஐயனுரிதர்ை. இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவர் பாடிய வெண்பாமாலைப் பாடல்களே உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர். கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் கண்டிலமாகிய ஞாயிறென் றும், கந்தழியென்பது ஒரு பற்றுக்கோடுமின்றித் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருளென்றும், வள்ளியென்பது தேவர்க்கு அமிர்தம் வழங்கும் தண்கதிர் மண்டிலமாகிய திங்களென்றும் கூறுவர் நச்சினர்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழியென்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடையதாதலால் அது கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் வேருெரு துறையெனக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே ஆசிரியரது கருத்தாயின் அவற்றை ஞாயிறு திங்கள் என எல்லார்க்கும் விளங்கும் இயற்சொல்லால் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளி யென வருஞ்சொற்களால் மறைத்துக் கூற மாட்டார். நச்சினர்க்கினியர் பொருள் கூறிய முறையினை யொட்டிக் கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறு தலுடைய மேகத்தையுணர்த்து மென்றும் கந்தழியென்பது பற் றழிந்தாராகிய நீத்தார் தன்மையைக் குறிக்குமென்றும் வள்ளி யென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தைக் குறிக்குமென்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் முன்றும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என வரும் மூன்றதிகாரங்களில் முறையே கூறப்பட்டுள்ளன. வென்றும் விளக்கங் கூறுவாரும், கொடிநிலை யென்பது ஞாயிறு கந்தழியென்பது தீ; வள்ளியென்பது திங்கள், இம்முத்தி வழிபாடு கடவுள்வாழ்த்தொடு பொருந்தி வருமெனக் கூறுவாரும், கந்தழியென்னுஞ்சொல் இத்தொல்காப்பியத்தில் கொடிநிலை வள்ளியென்பவற்றையடுத்து முதலில் கூறப்படாமை யாலும் இச்சொல் வேறு பழைய தமிழ் நூல்களில் யாண்டும் குறிக்கப்படாமையாலும், வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என ஆசிரியர் முன்னர் வெட்சித்