பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮摄{} தொல்காப்பியம் நுதலியபொருள் திணையிற் குறித்த காந்தள் என்னும் சொல்லே எடெழுது வோரால் கந்தழியெனத் தவருகத் திரித்தெழுதப்பட்டதென் பாரும் எனப் பல திறத்தர் உரைகொள்வோர். இங்கெடுத்துக் காட்டிய விளக்கங்கள் அவரவரது அறிவின் திறத்தால் நலிந்தும் வலிந்தும் திரித்துங் கூறப்பட்டனவாதலின் இவை தொல்காப் பியனர் கருதிய பொருளை விளக்குவனவெனக் கொள்ளுதற் கில்லை. "குன்ருச் சிறப்பிற் கொற்றவள்ளை'யென முன் வஞ்சித்திணைக் குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளே யென்னுந் துறையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண் பாட்டாய் வருதலுண்டு. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாக வேலை நோக்கிய விளக்குநிலை யீருகச் சொல்லப்பட்டனவும், வாயுறை வாழ்த்து, செவியறிவுறுஉ புறநிலை வாழ்த்து கைக்கிளைவக்ை என்பனவும் துயிலெடை நிலை முதலாகப் பரிசில்விடையீருகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஒம்படையும் உட்பட உலக வழக்கின்கண்ணே மூன்றுகாலமும் பற்றி வருவன வும் பாடாண்திணைக்குரிய துறைகளாமென இவ்வியல் 29, 30ஆம் சூத்திரங்களில் தொகுத்துரைத்தார் ஆசிரியர் தொல் காப்பியஞர். இங்ங்ணம் அகத்திணையேழற்கும் புறமாய் நிகழும் புறத்திணை கள் வெட்சி முதல் பாடாண் இறுதியாக ஏழெனக் கூறியிருக்க வும், பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல் களையியற்றிய பிற்காலத்து ஆசிரியர்கள் பகைவருடைய பசுக் களைக் கவர்தல் வெட்சி, அங்ங்ணம் கவரப்பட்ட பசுக்களை மீட்டல் கரந்தை, பகைவர் நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, அங்ங்ணம் தம்நாட்டை நோக்கிவரும் படையை எதிர் சென்று தடுத்து நிறுத்துதல் காஞ்சி, தம்முடைய மதிலக்