பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i4 தொல்காப்பியம் நுதலியபொருள் சென்று எதிர்ப்படுதல் இடந்தலைப்பாடாகும். தலைவியோடு தனக்குள்ள உறவினைத் தலைவன் தன் உயிர்த்தோழனுகிய பாங்கனுக்குச் சொல்லி, நீ எனக்குத்துணையாக வேண்டுமென வேண்ட, அவன் குறிவழிச்சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்ந்து வந்துணர்த்தியபின் சென்று கூடுதல் பாங்கற்கூட்ட மெனப்படும். இக்களவொழுக்கம் நீண்ட நாளேக்குத் தொடர்ந்து நிகழவேண்டுமென விரும்பிய தலைவன், தலைவிக்குச் சிறந்தா ளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கூடல் தோழியிற் கூட்டமாகும். இவை நான்கும் இம்முறையே நிகழும். இனி, இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைமகளை யெதிர்ப்பட்ட காலத்து அன்புடையாரெல்லார்க்கும் இயற்கைப்புணர்ச்சி தடையின்றி நிகழுமென்பதற்கில்லை. தலை மகளே யாதானுமோரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்புணர்ந்து கூட்டத்திற்கு இடையீடு உண்டாயவழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, நேற்றுக் கண்டாற்போல் போல இன்றுங் காணலாகுமோ என எண்ணி அங்கே மறுநாளுஞ் செல்லுதலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப் புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு பட்டவிடத்துத் தலைவன் தன் வருத்தத்தினைப் பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நின்ற நிலையறிந்துவந்துகூற அங்கே சென்றும் கூடுவன். அவ் விடத்தும் இடையீடுபடின் தோழிவாயிலாக முயன்றெய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது அங்குண்டாகிய வேட்கை இருவர்க்குந் தணியாது நின்று மணஞ்செய்த பின்னர்க் கூடு தலும் உரியன். இவ்வகையில்ை இக்களவொழுக்கம் மூவகைப் படுமென்ருர் இளம்பூரணர். எல்லாவுயிர்க்கும் உரிய இன் பவுணர்வும், அவ்வின் பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினையீட்டுதற்குரிய வரம்