பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 115 பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பினல் நிகழும் ஐந் திணைக்கண் நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்கால், மறை யோரிடத்து ஒதப்பட்ட எண்வகை மணத்துள்ளும் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது ஒழுகலற்றினை யொக்கும் என்பர் ஆசிரியர். கந்தருவராவார் நல்ல யாழமைத்து இசை பாடுதலில் வல்லவரென்றும் அவர் தாம் எக்காலத்தும் ஆணும் பெண்ணுமாக இணைந்தே செல்லும் இயல்பினரென்றும் கூறுபவாதலின், அவர்களைத் துறையமை நல்யாழ்த்துணைமை யோர் என்ருர் தொல்காப்பியர்ை. அவர்காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமை யால் மறையோர்தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ்நாட்டு மணமுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கவுணர்த்தல் அவரது கடனுயிற்று. ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மையாகிய கைக்கிளே. ஒத்த கேண்மையாகிய அன்பினைந்திணை, ஒவ்வாக்கேண்மை யூாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டுவகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும். நாற்பத்தெட்டாண்டு பிரமசாரியங் காத்த இளைஞனுக்குப் பன்னிரண்டு வயதுடைய கன்னியை அணிகல னணிந்து கொடுப்பது பிரமம். மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்ருல் மறுக்காது கொடுப்பது பிரசாயத்தியம். தகுதியுடையாளுெருவனுக்குப் பொன்னிற்ை பசுவும் எருதுஞ் செய்து அவற்றிடையே பெண்ணே நிறுத்தி அணிகலன் அணிந்து "நீங்களும் இவைபோற் பொலிந்து வாழ்மின் என நீர்வார்த்துக் கொடுப்பது ஆரிடம். வேள்வி செய்த ஆசிரியனுக்கு வேள்வித் தீமுன் கன்னியைத் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வம் கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடினுற் போன்று ஒருவனும் ஒருத்தியும் தாமே யெதிர்ப்பட்டுக் கூடுவது கந்தருவம். கொல்லுமியல்புடைய எருதினை அடக்கியவன் இப்