பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} || 6 தொல் காப்பியம் நுதலியபொருள் பெண்ணை மணத்தற்குரியன், வில்லேற்றின்ை இவளை மணத்தற் குரியவன், இன்னதொரு பொருள் தந்தான் இவளே மணத்தற் குரியன் என இவ்வாறு சொல்லி, சொல்லியவண்ணஞ் செய் தாற்குப் பெண்ணைக் கொடுப்பது அசுரமெனப்படும். தன்னல் விரும்பப்பட்ட பெண்ணை, அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாருக வலிதிற் கவர்ந்து செல்வது இராக்கதம் எனப்படும். முத்தாள், துயின்ருள் களித்தாள் ஆகிய மகளிரைக் கூடுதல் பைசாசம் எனப்படும். மறையோர்க்குரிய நூலிற் சொல்லப்பட்ட இவ்வெட்டு மணங்களையும் முறையே அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும் பொருள் வினைநிலை, இராக்கதம், பேய்நிலை என மொழிபெயர்த்து வழங்குவர் தமிழர். இவையெட்டும் வடமொழியாளர்க்கே யுரியன வென்பார் மறையோர்தேஎத்து மன்றல் எட்டு என்ருர் தொல் காப்பியர்ை. எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க் குரியன அல்ல என்பது பெறப்படும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத் தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும், தமிழர் கூறிய கைக்கிளைப்பாற்படுவன வென்றும், பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையா யடங்குமென்றும், கந்தருவமென்ற ஒன்றும் ஐந்திணையின்பாற்படு மென்றும் இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் வகுத்துரைத்துள் ளார்கள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம், மறையேர்ர் தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினை யுடையதெனவே, கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது இக்களவொழுக்கமாகுமெனக் கந்தருவத்திற்கும் களவொழுக்கத்திற்குமிடையே யமைந்த ஒற்றுமையினை நச்சி ஞர்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார்.