பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் # 17 ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர், புனலோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மண மாகும். இங்ங்ணம் கூடிைேர் தம் வாழ்நாள் முழுதுங் கூடி வாழ்வரென்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இக் கந்தருவத்திற்கு உண்டு. தமிழர் கூறும் கள வொழுக்கமோ இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினல், தான் அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சியேயாகும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரையொருவர் இன்றியமையா தொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலை பெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தபின் ஒருவரை யொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந் திண்மை, தமிழர் ஒழுகலாருகிய களவொழுக்கத்தின் முடிந்த பயணுகும். உலகிய லில் உளவாகும் பலவகை இடையூறுகளால் ஒருவரையொருவர் மணந்துகொள்ள இயலாமல் உள்ளப்புணர்ச்சி யளவே கூடி வாழ்ந்து பின்னர் இறந்த காதலரும் இத் தமிழகத்து இருந்தனர். மணிமேகலையிற் கூறப்படும் தருமதத்தன் விசாகை யென்னும் இருவரும் யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்திய வர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறிய பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும். கந்தருவ வழக்கில் மெய்யறு புணர்ச்சி முதற்கண் தோற்று வது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாகுமளவும் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்ருது தம்மெதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு.