பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 தொல்காப்பியம் நுதலியபொருள் இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட அளவே வேட்கையைத்துண்டி நிற்றற்கு அவ்விருவரும் பண்டைப் பிறப்பிற் பயிலியது கெழீஇய நட்பன்றிப் பிறிது காரணமில்லை யென்பதே தொல்லாசிரியர் கருத்தாகும். ஒத்த பருவத்தார் ஒரு வரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்ரு மையின் ஒன்றியுயர்ந்த பாலதாணேயிற் காண்ப' என்ருர் ஆசிரியர் ஈண்டுக்காணுதல் என்றது தனக்குச் சிறந்தாராகக் கருதுதலே. தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றியவழி இவள் மக்களுள்ளாள்கொல்லோ தெய்வமோ எனத் தலைவனுள்ளத்தே ஐயம் தோன்றும் ஒப்புமையிற் குறைவுடையளாயின் அவ்விழிபே அவளை இன்னுளெனத் தெளிவிக்குமாதலின், அந்நிலையில், ஐயந்தோன்றுதற்கிடமில்லை. தலைவி தன்னினும் உயர்ந்த தலைவனை நோக்கி இவன் தெய்வமோ மகனே என ஐயுற்ருல் அவளுள்ளத்தில் அச்சந்தோன்றுமேயன்றிக் காமவுணர்வு தோன்ருது. ஆகவே இங்ங்ணம் ஐயப்படுவான் தலைமகனே யென்பர். தலைமகளை நோக்கி இவள் தெய்வமகளோ எனத் தலைவன் ஐயுற்ற காலத்து, அவள் கூந்தலிலணிந்த மாலை யிடத்தே மொய்த்த வண்டுகளும் அவளணிந்த அணிகலன்களும் நறுமலரும் அவள் பால் தோன்றும் தடுமாற்றமும் கண்ணிமைப்பும் அச்சமும் அத்தன்மைய பிறவும் ஐயத்தினைக் களைதற்குரிய கரு வி யாகும். இங்கெடுத்துக் காட்டிய அடையாளங்களைக்கொண்டு தலைமகளே இன்னுளெனத் துணிந்த தலைமகன், அவளது கருத் தறியாது அவளை யணுகுவானுயின், அச்செயல் பொருந்தா வொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும். ஒத்த அன்பினுல் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உளக் கருத்தைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதலே முதற்கண் வேண்டப்படுவதாகும். அங்கே ஒருவரோடொருவர் உரையாடு தலும் முறையன்ரும். ஒருவர் வேட்கைபோல மற்றவர்க்கும்