பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தொல்காப்பியம் நுதலியபொருள் இங்குச் சொல்லப்பட்டவை நிகழ் ந் த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழுமென்பர். தனியிடத்தே தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன், தனது பெருமையும் உரனும் நீங்க வேட்கை மீதுர்தலால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினையினும் தலைமகள்பால் தோன்றும் அச்சமும் நானும் மடனும் அதற்குத் தடையாய் நிற்பனவாம். அத்தடை நீங்குதற் பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில கூறுதலும், தான் சொல்லும் சொல்லின்வழி அவள் நிற்கும் படி சில கூறுதலும், அவளது, நலத்தினை யெடுத்துரைத்தலும், அது கேட்டதலைமகள்பால் முறுவற் குறிப்புத் தோன்றி நிற்றலை யறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதுர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகள் உள்ளப் பண் பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். பெருமையும் உரனுமுடைய தலைவன், காதல் வெள்ளம் புரண்டோடத் தனக்குச் சிறந்தாளெனத் தெளிந்த தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத் தைப் பாராட்டி யுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கி நின்று அன்பொடு தழீஇய சொற்களைச் சொல்லுதலும், தலைவ னது ஊற்றுணர்வு என்றும் பயிலாத தன் மெல்லியல் மெய்யிற் பட நாணமுடையளாகிய தலைவி, அங்குள்ள கொம்பும் கொடியு மாகியவற்றைத் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நிற்க, அதுகண்ட தலைவன், இவ்வூற்றின்பத்திற்கு இடையூருய் நின் மனத்து நிகழ்ந்தவை யாவையென வினவி நிற்றலும், அவளே மெய்யுறுதற்கியலும் காலம் வாய்க்காமையை யெண்ணி வருந்துதலும், பின்னர் அவளே மெய்யுறுதலும், மேற்கூறியவற் றுடன் இன்பந் திளைத்தலையும் விரைவாகப் பெற்றவிடத்து,