பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 9 'வடுவில் காப்பிய மதுர வாய்ப்பொருள் மரபு வீட்டியதால் வழுதி யாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடுநாள் * அடைவுகோத்தன அமுத சூத்திரம் அறுபதாய்ச் சமைநூல் அமரர் கீழ்ப்பட அறிஞர் மேற்பட அருளு மூர்த்திகளே” என இறைவனைப் போற்றுகின்ருர். இப்பாடலில் வடுவில் காப்பியம்' என்றது. குற்றமற்ற தொல்காப்பியத்தை."மதுரவாய்ப் பொருள் மரபு" என்றது, இனிமையமைந்த பொருளிலக்கணத் தைக் கூறும் பொருளதிகாரப் பகுதியை, தொல்காப்பியப் பொருளதிகார மரபு பாண்டி நாட்டில் அரசியல் ஆட்சியின் மாறுபாடு காரணமாகச் சிதைந்ததென்பது, வடுவில் காப்பிய மதுரவாய்ப் பொருள் மரபு வீட்டியதால் வழுதியாட்சியை வளவன் மாற்றிட மதுரை கூப்பிடும் நாள் என வருந் தொடராற் புலப் படுத்தப்பட்டது. தமிழுக்கே சிறப்பாக வுரிய பொருளதிகார மரபு சிதைந்து அழியும் நிலையிற் பாண்டி நாட்டு ஆட்சி முறை குழப்பமடைந்ததென்றும், அக்காலத்தில் நாட்டிலேற்பட்ட அரசியற் குழப்பத்தை மாற்றி அரசியலே ஒழுங்குபடுத்த வேண்டு மென மதுரை நகரப் பெருமக்கள் சோழமன்னனை யழைத்து முறையிட்டனரென்றும், அந்நிலையில் மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமான், கூடல் நகர மாந்தரது வேண்டுகோளை நிறைவேற்றித் தேவரமுதத்தை யொத்து அண்ணிக்கும் அறுபது சூத்திரங்களால் முறைப்பட அமைந்த களவியல் என்னும் பொருளிலக்கண நூலைப் புலவர் என்னும் பெயர்க்குரிய தேவர்கள் கீழ்ப்படவும் அத்தேவர்களினும் தமிழ் மக்கள் புலமைத் துறையில் மேற்பட்டு விளங்கவும் அருளிச் செய்தனன் என்றும் மேற்காட்டிய பாடலிற் கவிச் சக்கரவர்த்தி