பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் #25 அச்சம் நீங்கிலுைம் நாணமும் மடனுமாகிய இரண்டும் தலைவி யிடத்து என்றும் நீங்காதுளவாம். தலைவன் புணர்ச்சி கருதிக் கூறுஞ்சொல்லின் எதிரே இசைவில்லாதாரைப்போன்று கூறு தலே தலைவிக்கு இயல்பாகும். இன்னின்ன இடங்களில் தலைவி உரையாடுதற்குரியன் என்பதை இவ்வியல் 21-ஆம் சூத்திரத் தால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் இன்ன நாளில் நின்னை மணந்துகொள்வேன் எனச் சொல்லிவிட்டுத் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது நீங்கிய நிலையில், தன்னைக் கண்டு தோழி ஐயுறுதற்கேற்ற குறிப்பு தன்கண் தோன்ருதபடி மறைத்தொழுகிய தலைவி, தலைவன் வருமளவும் ஆற்ருது வருத்த முற்ற நிலையிலும், களவொழுக்கத்தில் வந்தொழுகுந் தலைவன் செவிலித்தாய் முதலியோரை எதிர்ப்பட்டபொழுதும், இவ்வொழுக் கத்தினை நின் தோழிக்குச் சொல்லுக என அவன் தனக்குச் சொல்லிய நிலையிலும் தானே தோழிக்குக் கூறுதலுண்டு. உயிரைக்காட்டிலும் நாணம் சிறந்தது; அத்தகைய நாணத் தினுங் கற்புச் சிறப்புடையது என்னும் முன்னேர் மொழியை யுளத்துட்கொண்டு, தலைவன் உள்ளவிடத்தையடைய நினைத் தலும் இவ்வாறு குற்றந்தீர்ந்த நற்சொற்களைக் கூறுதலுமாகிய இவை, தலைவி தானே கூறுங் கூற்றினுள் அமைதற்குரிய பொருள்வகையென்பர் ஆசிரியர். களவொழுக்கத்தின்கண் தலைவிக்கு இன்றியமையாத வளாகிய தோழி உரையாடுதற்குரிய பொருள்வகை யெல்லா வற்றையுந் தொகுத்துக் கூறுவது, நாற்றமும் தோற்றமும் (களவு-24) எனத் தொடங்குஞ் சூத்திரமாகும். இதன்கண் தோழி கூறுதற்குரியனவாக முப்பத்திரண்டு பொருண்மைகள் விரித் துரைக்கப்பெற்றுள்ளன. இங்கே தோழி கூறுவனவாக ஆசிரியர் எடுத்தோதிய பொருட்பகுதிகளை உற்றுநோக்குங்கால், மக்கள்