பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தொல்காப்பியம் நுதலியபொருள் மன நிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கமுதலியவற்ருல் உய்த் துணரும் மனப்பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் நல்லறிவும், உள்ளக் கருத்தறிதலருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறரறியாது ஒழுகும் அடக்கமும், மறைபுலப்படாமல் நிறுத்தும் நல்லுள்ளமும், மாசற்ற அறவுணர்ச்சியும், செய்யத் தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக்குணங்கள் முழுவ தும் தோழியினிடத்து ஒருங்கமைத்திருத்தல் புலம்ை. இவ்வாறு பொறுத்தற்கரிய பெருங் குணங்கள் யாவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவளே தோழியெனப் பாராட்டுதற்குரியவ ளென்பார், “தாங்கருஞ்சிறப்பின் தோழி' என்ருர் தொல்காப்பியர்ை. தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனுகிய நிலை யில் ஊரார் அலர் கூறிய காலத்தும், தலைவியின் வேட்கை அளவிறந்த நிலையிலும், அவளது வனப்புமிக்குத் தோன்றிய காலத்தும், தலைவைெடு தலைவியை ஒருசேரக் கண்ட காலத்தும் தலைவியின் மெலிவுக்குரிய காரணங்களைக் கட்டுவைப்பித்தும் கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது நோய்தீர வேலனை யழைத்து வெறியாடிய பொழுதும், வெறியாடுதலைத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும், காதல் மிகுதியால் தலைவனை நினைந்து தலைவி கனவில் அரற்றியபொழுதும் செவிலித்தாய் தோழியை வினவுதலுண்டு. இன்னவாறு நிகழ்ந்ததெனத் தோழி கூறியவழி இவ்விருவரது ஒழுகலாற்றினல் குடிக்குப் பழி விளைத லாகாதெனத் தெய்வத்தை வேண்டுதலும் தலைவி தலைவனுடன் போயிருளென்றறிந்த நிலையில் தோழியொடு ஆராய்ந்து அவ் விருவரையும் மனையறத்தின்கண் நிறுத்தற்கு முயலுதலும் அவள் செயல். தலைவன் மணந்துகொள்ளாது தலைமகளைப் பிரிந்த காலத்து அவள் கற்புவழிப்பட்டு மனைக்கண் அமைதியாக அடங்கியிருக்கும் நிலையினை யெண்ணிய நிலையிலும் தலைவனது குடிப்பிறப்பு தம் குடிப்பிறப்பினேடு ஒக்கும் என ஆராய்தற்கண்