பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் #27 ணும் இவைபோன்ற பிறவிடங்களிலும் செவிலி உரையாடுதற் குரியள். செவிலியுணர்வுடன் ஒத்த கருத்துடையளாயின் நற்ருய்க் கும் மேற்சொல்லப்பட்ட கூற்றுக்கள் உரியனவாம். தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றயும், குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து நின்று இவளது மெலிவு எதலைாயிற்று என வினவி நிற்பர். அது கேட்ட பெரியோர், முக்கால நிகழ்ச்சியினையும் தாம் ஒருங்கு ண ரு ம் நுண்ணுணர்வுடை யோராதலின், தலைவியொடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும் நிகழ்ந்ததை மறைத்தல் வாய்மைக்கு மாருதலானும் நும்மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள் என ஐயக் கிளவியால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணத்தற்குரிய கணவ லுைம் அறியப்படாத பேரறிவினையுடையாள் நும்மகள் என ஒரு பொருளும், தன் கனவளுகியொழுகும் தலைவலுைம் அறியப் படாத அறிவுரிமைபூண்டு மயங்குகின்ருள், இவள் தன்னறிவிற் சிறிதும் மயக்கமிலள், அவன் பொருட்டு மயங்குகின்றுள் என மற்ருெரு பொருளும் தரும் நிலையில் இங்ங்னம் ஐயுறக்கூறிய அறிவரது சொற்பொருளே யுய்த்துணர்ந்து தலைவன் தலைவியாகிய இருவரிடையே யமைந்த தொடர்பினைச் செவிலியும் நற்ருயும் அறிந்துகொள்ளுதலும் உண்டு. வேறு வேருகத் தம்முள் காதல் செய்தொழுகும் அறிவில்லா தாரைப்போலத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்பு சொல்லுஞ் சொல், தலைவியிடத்து நிகழ்தலில்லை. அங்ங்னம் சொல் நிகழாதொழியினும் தலைவியது வேட்கை புதுக்கலத்துப் பெய்தநீர் புறத்தே பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை யுடைத்தென்று கூறுவர். இயற்கைப் புணர்ச்சியாகிய களவு, கூட்டிவைப்பார் பிறரின்றித் தனிமையிற் பொலிவது. ஆதலின் தலைவன் தலைவி யிருவரும் தத்தமது உளக்கருத்தைப் புலப்