பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் £29. தனக்குத் துணையாவாள் இன்னுளெனத் தலைவனுக்குச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவிக்குரியதாகும் என்பர் ஆசிரியர். களவொழுக்கத்தில் நுணுகியாராய்ந்தறிதற்கரிய மறைப் பொருளெல்லாவற்றையும் கேட்டற்கும் சொல்லுதற்கும் உரிய தாயாகச் சிறப்பித்துரைக்கப்படுபவள் செவிலியேயாம். தனக்கு இன்றியமையாத உயிர்த்தோழியாகத் தலைவியால் விரும்பப்பட்ட தோழியென்பாள் மேற்கூறிய சிறப்புடைய செவிலியின் மகளா வாள். தலைவியின் களவொழுக்கம்பற்றித் தன் மனத்துள்ளே ஆராய்தலும் தலைவியின் சூழ்ச்சிக்குத் தான் உசாத்துணையாகி நிற்றலுமாகிய பெருங்கேண்மையுடையாள் இத் தோழியே யென்பர், தலைவன் தன்பால்வந்து குறையுற்று நிற்க அவனுள்ளக் கருத்தினை யுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும், தலைவியும் தானும் ஒருங்கிருந்த நிலையில் தலைவன்வர அந்நிலையில் அவ்விருவரது உள்ளக்கருத்தினை யுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத் தினையும் வைத்து ஒன்றுபடுத்துணரும் உணர்ச்சி மூவகைப்படும். இவ்வாறு முவர் மதியினையும் ஒன்றுபடுத்துணர்தலின் இது மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று. இங்ங்ணம் தலைவன் தலைவியென்னும் இருவர்பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்த பினல்லது தலைவன் தன்னை இரந்து பின்னிற்கும் முயற்சிக்குத் தோழி இடந்தரமாட்டாள். தன்னை இரந்து பின்னிற்குந் தலைவ னது நினைவின்கட்படும் மாசற்ற அன்பின் திறத்தையுணர்ந்து அவனைத் தலைவியோடு கூட்டுவித்தலும் அத்தோழியின் செயலே 钮菲母。 தலைவன் தலைவி யிருவரும் பிறரறியாது பகலிலும் இரவிலும் அளவளாவுதற்கெனக் குறிக்கப்பட்ட இடமே குறியென வழங்கப் படும். மனையுனுட்புகாது அங்குள்ளோர் கூறுஞ்சொற்கள்