பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தொல்காப்பியம் நுதலியபொருள் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறியாகும். ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர்தற்குத் தகுதியுடைய தாகிய இடம் பகற்குறியாகும். தலைவன் செய்த அடையாளமென மயங்தற்குரியன இயற்கையாக நிகழின் குறியல்லாதவற்றைக் குறியெனக் கொள்ளுதலும் தலைமகளுக்குரிய இயல்பாகும். கற்புடை மகளிர்க்குரிய சிறப்பிற் குன்ருவாறு மேற்கூறிய இரு வகைக் குறியிடங்களிலும் பிறரறியாதபடி தலைவனெடுகூடி யொழுகும் ஒழுக்கமும் தலைமகளுக்கு உண்டு. இங்ங்ணம் களவொழுக்கத்தில் வந்தொழுகுதல் காரணமாக என்றும் தன் தோழர்களுடன் கலந்துகொள்ளுதற்குரிய விளையாட் டினையும் திருவிழாச் செயல்முறைகளையும் விலகியொழுகும் ஒழுக்கம் தலைவனுக்கில்லை. யாவராலும் விரும்பி நோக்கப்படுந் தலைவன் களவொழுக்கம் காரணமாக இவற்றை விலகியொழுகு வானுயின் அவன் வாரமையற்றி அவனைப் பலரும் வினவ, அது காரணமாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலன மாதலின், இவற்றை நீங்கியொழுகுதல் கூடாதென விலக்குவர் ஆசிரியர். இவ்வாறே வழியருமையும் நெஞ்சழிதலும் அஞ்சுதலும் இடையூறும் ஆகிய இவை தலைவன்பால் நிகழ்தல்கூடா தென்பர். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் இக்களவொழுக்கத் தைக் குறிப்பினுல் உணர்வர். நற்ருய், செவிலியுணரும் முறைமை யால் அறிந்துகொள்வாள். இரவினும் பகலினும் அவ்வழி வந்து செல்லுந் தலைமகனையறிந்து அவனது வருகை காரணமாக மகளிர் சிலரும் பலரும் தம்முகக் குறிப்பிற்ை புலப்படுத்தும் அம்பலும், இன்னுளுேடு இன்னுளிடையது நட்பு எனச் சொல் லால் விரித்துரைப்பதாய அலரும் தோன்றிய பின்னரல்லது இம் மறை வெளிப்படாதாதலின், இக்களவு வெளிப்படுதற்குத் தலை வனே காரணமாவன், களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை மணந்துகொள்ளுதலும் அது வெளிப்படுதற்கு முன்னரே மணம்