பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 13i. செய்துகொள்ளுதலும் என மணந்துகொள்ளும் முறை இரு திறப்படும். களவு வெளிப்பாடே கற்பியல் வாழ்க்கையாகக் கருதப் படுமாயினும் உலகத்தாரறியத் தலைவியை மணந்துகொள்ளாத நிலையில் ஒதல், பகை, துது என்பன காரணமாகத் தலைவன் நெட்டிடைப் பிரிந்து சேறல் கூடாதென்பர் ஆசிரியர். கற்பியல் கற்பினது இலக்கணம் உணர்த்தினமையால் இது கற்பிய லென் னும் பெயர்த்தாயிற்று. அன்புரிமை பூண்ட தலைமகன் தன்பால் அன்புடைய தலைவியைப் பெற்ருேர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனை வாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்துரைக்கப் பெறு வதாகும். முன் களவியலிற் கூறியவாறு ஒத்த அன்புடைய ஒருவ னும் ஒருத்தியும் நல்லுழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடியொழுகினராயினும் தலைமகனுடைய பெற்ருேள் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ளு தல் இயலாது. ஆகவே ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத்துறுதியை உலகத்தாரறிய வெளிப்படுத்தும் நியதியாகிய வதுவைச் சடங்குடன் தலைவன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சி யாயிற்று. உள்ளப் புணர்ச்சியளவில் உரிமை பூண்டொழுகிய தலைவனும் தலேவியும் உலகத்தாரறிய மனேயறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்குஞ் செயல் முறையே பண்டைத் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்காகும். இதனைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியர்ை. கணவனிற் சிறந்த தெய்வம் இல்லையெனவும் அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும் தலைமகளுக்குப்