பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 தொல்காப்பியம் நுதலியபொருள் னின்று கன்னின் றவர்" (திருக்குறள்-771) எனவும், "என்னை புற்கை யுண்டும் பெருந்தோளன்னே' (புறம்-84) எனவும் வரும் தொடர்களின் என்-ஐ என்பது என் தலைவன் என்ற பொருளில் வழங்கக் காண்கின்ருேம். ஐ என்பதன் அடியாகப் பிறந்ததே ஐயர் என்னுந் தமிழ்ச் சொல்லாகும். "ஐ வியப்பாகும் (உரி-88) என்பது தொல்காப்பியம். தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத் தும் பேரறிவுடைமையாற் பலரும் வியந்து பாராட்டத் தக்க தலைமைச் சிறப்புடையாரை ஐயர் என வழங்கும் மரபுண்மை இதனுற் புலகுைம். புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்" (கற்-5) என்புழித்தலைவன், புதல்வனைப் பயந்து வாலாமை நீங்கிய தலை வியைக் கருதி, அறனுற்றி முத்த அறிவுடையோர்களாகிய தன் குல முதல்வரைத் துணையாகக் கொண்டும் அமரகத்தஞ்சா மற வர்களாய்த் துறக்கம் புக்க வீரர்களே எண்ணியுஞ் சிறப்புச்செய்த லுண்டென்பதனை ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆசறு காட்சி யையர் (குறிஞ்சிப்-17) எனக் கபிலரும், விண்செலன் மரபின் ஐயர் (திருமுரு-407) என நக்கீரரும் முற்றத்துறந்த தவச்செல் வர்களை ஐயர் என வழங்கியுள்ளார்கள். சமணரில் இல்லறத்தா ராகிய உலக நோன்பிகளைப் பெரும் பெயர் ஐயர்' என்பர் இளங்கோவடிகள். தமையன்மார்களே ஐயர் என வழங்குதலும் உண்டு. 'அறத்தொடு நின்றேனேக் கண்டு திறற்பட, என் ஐயர்க்குய்த்துரைத்தாள் யாய்” என்பது குறிஞ்சிக்கலி. இளமா வெயிற்றி இவைகாண் நின்ஜயர், தலே நாளே வேட்டத்துத் தந்த நல் ஆனிரைகள்” என்பது சிலப்பதிகாரம். திருநாளைப்போவார், திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகிய தலைமைப் பண்புடைய பெரி யோர்களே ஐயர் என்ற சொல்லாற் சிறப்பு முறையிற் சேக்கிழா