பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43& தொல்காப்பியம் நுதலியபொருள் மறைந்தொழுகும் ஒழுகலாருகிய களவு பலரறிய வெளிப் படுதலும் பின்னர் தலைவியின் சுற்றத்தார் கொடுப்பத் தலை மகளைத் தலைவன் மணந்து கொள்ளுதலுமாகிய இவை முத லாகிய வழக்கு நெறியில் மாறுபடாது, மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவ்வைந் தியல்களோடுங்கூடி நிகழ்வது கற்பென்னும் ஒழுகலாருகும் என்பர் ஆசிரியர். இல்வாழ்க்கையும் புணர்ச்சியும் முதலியவற்ருல் தலைவன் தலைவி யென்னும் இருவ ருள்ளத்துந் தோன்றும் மகிழ்ச்சியே மலிவெனப்படும். புணர்ச்சியா லுண்டாகிய மகிழ்ச்சி குறைபடாமல் காலங் கருதியிருக்கும் உள்ள நிகழ்ச்சியே புலவியாகும். அங்ங்ணம் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பிலைன்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை ஊடல் எனப்படும். அவ்வாறு தலைவிக்கு ஊடல் நிகழ்ந்தவழி அதற் கேதுவாகிய செயல் என்பால் நிகழவில்லையேயெனத் தலைவனும் அவன்சார்பாக வாயில்களும் தலைமகளுக்கு உணர்த்துதலே உணர்வெனப்படும். பொருளிட்டுதலும் போர்மேற் சேறலும் கலை பயிலுதலும் முதலிய இன்றியமையாத உலகியற் கடமை கருதித் தலைவன் தன் மனையாளைப் பிரிந்துசேறல் பற்றிய நிகழ்ச்சி பிரிவெனப்படும். தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவை யென்பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலால் அவற்றைத் தொல்காப்பியனர் தம் நூலில் விரித்துக் கூறவில்லை. தொன்று தொட்டுத் தமிழ்மக்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அக நானுற்றில்-66, 86-ஆம் பாடல்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். வேள்வியாசான் காட்டியமுறையே அங்கிசான்ருக நிகழும் சடங்குமுறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங் களிலும் கூறப்படாமையால் ஆரியர்மேற்கொண்ட அவ்விவாக முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்குமுறைக் கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளியலாம். கலித்