பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 தொல்காப்பியம் துதலியபொருள் தலைவி தன் பிரிவினைப் பொறுத்திருக்கமாட்டாள் என்ற நிலையில் தனது பயணத்தை நீங்குதல் இல்லை; அவளை வற்புறுத்தல் கருதிச் சிறிதுபொழுது தாமதித்துச் செல்வன். தலைவன் வினை மேற்கொண்டு சென்ற இடத்தில் அவன்பாற் சென்று தலைவியின் ஆற்ருத்தன்மையை யாவரும் சொல்வதில்லை. தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றிபெற்ற நிலையிலேதான் தலை வியைப்பற்றிய நினைவு அவனுள்ளத்தே விளங்கித் தோன்றும். தலைவிக்குப் பூப்புத்தோன்றி மூன்றுநாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் கருத்தோன்றுங் காலமாதலின், தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்துப் பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் தலைவியைப் பிரிந்துறைதல் கூடாதென்பர் ஆசிரியர். யாவராலும் விரும்பத்தக்க கல்வி கருதிப் பிரியுங்காலம் மூன்ருண்டுகளுக்கு மேற்படாது. பகை தணிவினையாகிய வேந் தற்குற்றுழிப் பிரியும் பிரிவும், அதனைச்சார்ந்த துது, காவல் என்பனவும், ஒழிந்த பொருள்வயிற் பிரிவும் ஓராண்டிற்குட்பட்ட காலவெல்லேயினையுடையன. யாறு குளங்களிலும் சோலைகளிலும் விளையாடி உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சி யெய்துதல் தலைவன் தலைவி யிருவர்க்கும் உரியதாகும். இங்ங்ணம் காமநுகர்ச்சி யெல்லாம் நுகர்ந்தமைந்த பிற்காலத்தே, பாதுகாவலமைந்த பிள்ளைகளுடனே நெருங்கி, அறத்தினை விரும்பும் சுற்றத்தாருடனே தலைவனும் தலைவியும், வீடுபேருகிய சிறப்பினேயருளும் முழுமுதற்பொருளை இடை விடாது எண்ணிப் போற்றும் நன்னெறியிற் பழகுதல், மேற்கூறிய மனைவாழ்க்கையின் முடிந்த பயனுகும். தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய இப் பன்னிருவரும் மனேவாழ்க்கையின்கண்ணே கணவன்