பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 தொல்காப்பியம் நுதலியபொருள் அகப்பொருள் ஒழுகலாற்றில் தலைவன், தலைவி, தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொல்லமைதியினையும் அவர் தம் கூற்றில் அமைத்தற்குரிய பொருள் வகையினையும் சிறப்பு முறையிற் கூறுவது இப்பொருளியலாகும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 52-ஆக இளம்பூரணரும், 54-ஆக நச்சினர்க்கினிய ரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய் பாட்டா ல் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும், சொல்லக் கருதிய பொருள் இயைபு பெறப் புலப்படும். அவ்வழிச் சொற்களுக்கு அங்கமாகிய அசைச் சொற்கள் மாறி நிற்றலில்லை. உலகியலில் எல்லோர்க்கும் உரியதாய்ப் பயின்றதாகாது ஒரு திறத்தார்க்கே யுரியதாய்ப் பயிலும் சொல்வகையினைப் பாற் கிளவி என வழங்குவர் ஆசிரியர். பால்-பக்கம். பாற்கிளவி-ஒரு திறத்தார்க்கே உரியதாய்ப் பயிலும் சொல். துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் கருதிய இயல்பு புலளுக எண்வகை மெய்பாடும் விளங்கப் பொருந்திய உறுப் புடையதுபோலவும், உணர்வுடையதுபோலவும், தனது கூற்றினை மறுத்துரைப்பதுபோலவும், நெஞ்சொடு சேர்த்துக் கூறியும், பேசும் ஆற்றலில்லாத பறவை, விலங்கு முதலியவற்ருேடு பொருந்தி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறியும், பிறருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும், அறிவை யும் அறிதற்கு வாயிலாகிய பொறி புலன்களையும் வேறுபட நிறுத்தி உவமைப் பெயரும், உவமிக்கும் பெயரும், தொழிலும் பண்பும் பயனுமாகிய மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்துமிடத்து உவமங் கூறுதலும், தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் உரிய ஒரு கூற்றுச் சொல்லாம்.