பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 霹雳 காமம் இடையீடுபட்ட காலத்து களுக்கண்டு கூறுதலும் அவ்விருவர்க்கும் உரியதாகும். அவ்விருவரும் உடன்போகிய காலத்துத் தாய் களுக்கண்டு கூறுதலும் உண்டு. தம்முள் அன்புடையராய்ப் பழகும் இன்ப நிலையில்லாத ஏனைத் துன்பக் காலத்துத் தலைவி, தோழி, செவிலி, நற்ருய் ஆகிய நால்வர்க் கும் மேற்கூறியவாறு அறிவும் புலனும் வேறுபடக் கூறும் ஒரு கூற்றுச்சொல் உரியதாகும். அன்பொருமையும் உயிரினுஞ் சிறந்த நாணமும் மடனும், குற்றமற்ற சிறப்பினையுடைய பெண் பாலார் நால்வர்க்கும் உரியவாகும். எனவே இவர் நால்வரும் இக்குணங்களுக்கு இழுக்கு நேராவண்ணம் உரையாடுதல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். தலைமகள், தனது உடல் வனப்பு வேறுபட்டுத் தனிமை யுறுங்கால் தலைமகனது பிரிவைத் தன் அவயங்கள் முன்னமே உணர்ந்தனபோலப் பொருந்திய வகையாற் கூறுதலும் உண்டு. தன் உடம்பும் உயிரும் மெலிந்த நிலையிலும் இவை என்ன வருத்த முற்றன? எனத் தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறுவதல்லது, தலைவனைத் தானே சென்று சேர்தல் தலைமகளின் இயல்பன்ரும். தன் நெஞ்சுடன் தனித்து ஆராயுங் காலத்துத் தலைமகன் இருக்குமிடத்தை யடைதல் வேண்டுமெனத் தலைவி கூறுதலும் உண்டு. தலைவன் புறத்தொழுக்கத்தை மறைக்குமிடனும் தான் அவன்பால் பெரு விருப்புற்ற நிலையும் அல்லாத ஏனையிடங்களி லெல்லாம் மடன் நீங்காதபடி நிற்றல் தலைவியின் கடனுகும். தலைவன் தலைவி என்னும் இருவரும் இயற்கைப் புணர்ச்சி யாகிய முதற் காட்சியில் ஒருவரையொருவர் சந்தித்த முறைமை தூய அன்பொடு பொருந்திய அறத்தின் வழிப்பட்ட நற்செயலே யென்பதனை அறிவுறுத்துதல் களவு வெளிப்படுத்தலின் கருத் தாகும். ஆதலால் அங்ங்ணம் வெளிப்படுத்தும் முறையினை 'அறத் தொடு நிற்றல்' என்பர் ஆசிரியர். தலைவி தலைவைெடு தனக்