பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் #45 காமவுணர்வு மிக்குத்தோன்றிய காலத்தல்லது சொல் நிகழ்ச்சி யில்லாமையால் தலைமகளது வேட்கையை அவளது தோற்ற முதலியவற்றைக்கொண்டு செவிலி முதலியோர் குறிப் பினுல் உணர்வர். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, தீதொரீஇ நன்றின்பாலுய்க்கும் நல்லறிவு, பிறர்பாற் காணுதற்கரிய அருமை என்பன பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகும். ஆகவே மேற்சொல்லிய அறத்தொடு நிலைவகையும் இனிக்கூறும் வரைவுகடாதற் பகுதியும் ஆகிய வற்றை உண்மைவகையானும் புனைந்துரை வகையானும் கூறும் ஆற்றல் தோழி முதலிய பெண்பாலார்க்குண்மை இனிது புலம்ை. தலைமகன் வரும் காலமும் வழியும் ஊரிடையுளதாங் காவலும் ஆகியவற்றைத் தப்பியொழுகுதலால் உளவாம் தீமைகளை எடுத்துக்காட்டலும், தான் நெஞ்சழிந்து கூறுதலும், தலைமகனுக் குளவாம் இடையூறு கூறுதலும், அவனைப் பகற்குறி விலக்கி இரவில் வருகவென்றலும், இரவும் பகலும் இங்கு வாராதொழிக வெனக் கூறுதலும், நன்மையாகவும் தீமையாகவும் பிறபொருளை யெடுத்துக் காட்டலும் பிறவுமாக இங்ங்ணம் தலைவனது உயர்ச்சி கெடத் தோழி கூறுஞ் சொற்கள்யாவும் தலைமகளுக்குத் தலை மகன்பால் விருப்பமின்மையாற் கூறப்பட்டன அல்ல; தலைமகளை அவன் விரைவில் மணந்துகொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாம். தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப் பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத்தலும் உண்டு. களவொழுக்கத்தில் தலைவன் தனியே வந்து போவதன்றித் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து செல்லுதலும் இயல்பேயாகும்.