பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தொல்காப்பியம் நுதலியபொருள் உண்ணுதற்ருெழிதல் நிகழ்த்துதற்குரியன அல்லாத உணர்வற்ற பொருள்களை அத்தொழிலை நிகழ்த்தினவாக ஏறிட்டுக் கூறுதலும் இவ்வகத்திணைக்கண் வழங்கும் மரபாகும். தலைமகளைப் புறத்தே செல்லவொட்டாது காக்கும் காவல் மிகுதியான நிலையில், எங்கள் சுற்றத்தார் தலைமகளைக் கொடுக்க இசையாமைக்குக் காரணம் பரிசப்பொருளை வேண்டி நிற்றலே’ எனத் தோழி தலைமகனை நோக்கிக் கூறுதலும் விலக்கத் தக்கதன்று. காவல் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நேர்ந்தபொழுது, தலைவன்பால் உளவாம் அன்பும், அன்பின் வழிப்பட்ட மனே யறமும், மனேயறத்தின்கண் இருந்து நுகர்தற்குரிய இன்பமும், பெண்ணியல்பாகிய நாணமும் ஆகிய இவற்றிற் கருத்தின்றி அடங்கியொழுகும் நிலை, பழியுடையதன்ருதலால் இற்செறிக்கப் பட்ட காலத்தில் இவற்றைப்பற்றி எண்ணுதற்கு இடமில்லை என்பர் ஆசிரியர். பொருளிட்டுதல் கருதிப் பிரிந்து செல்லுந் தலைமகன், தன்ளுேடு உடன்வரக் கருதிய தலைமகளுக்கு 'யான் போகும் வழி வெம்மைமிக்க பால நிலமாம் எனக் கூறி விலக்குதலும் தவருகாது. முன்னைய நூல்களில் அகப்பொருளாகவும் புறப் பொருளாக வும் எடுத்தோதப்பட்டனவன்றித் தம் காலத்து வாழும் சான்ருேர் தமது அநுபவத்தால் தெளிந்து கூறுவனவும் உயர்த்தோர் வழக் கென ஏற்றுக்கொள்ளத் தக்கனவாதலின், உயர்தோர் வழக் கொடு பொருந்தி வருவனவெல்லாம் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்கப்படும். உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக் கள் அகப்பொருளொழுகலாற்றிற்குப் பயனுடையனவாக வரு மாயின், அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும்