பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 14? பழியுடைய தன்ரும். அவ்வாறு உலக வழக்கினைக் கடந்து வருவனவாகிய பொருட்பகுதிகளைச் செய்யுளில் அமைத்துக் கூறுங்கால், நாணம் நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறிப் படுத்துக் கூறுதல் வேண்டும். முறைப்பெயரிடத்து இருபாலுக்கும் பொருந்தின தகுதி யுடைய எல்லா என்னும் பொதுச் சொல், ஆண்பால் பெண் பால் ஆகிய அவ்விரண்டற்கும் ஒப்ப வுரியதாய் வழங்கும். தந்தைக்குரிய பொருள்களாய் மக்கள் எய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய், அறமும் புகழுங் கருதி ஒருவர் கொடுப்ப மற்றையோர்பாற் செல்லாதனவுமாய், உழவு முதலிய தொழில் முயற்சியால் வாராதனவுமாய், வேறுபட்ட பிறரால் வலிந்து கொள்ளப்படாதனவுமாய் வரும் பொருளுரிமை முறை, இவ்வகப்பொருள் ஒழுகலாற்றிற் பொருந்தி வருதல் உண்டு என்பர் ஆசிரியர். சங்கத்தொகை நூல்களில் தலைவியின் அங்கங்களைத் தோழி தன்னுடையனவாக உரிமை பாராட்டிக் கூறுவனவாக அமைந்த கூற்றுக்கள் யாவும் இத்தகைய உரிமை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கிழவன், கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணுெரு மையும் பெண்ணுெருமையும் உணர்த்தி நிற்கும் ஒருமைச் சொற் கள், நானிலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண்ணே நின்று பன்மைப் பொருளையுணர்த்தும் முறை, உலக வழக்கில் நிலைபெற்றது என்பர் அறிஞர். இன்பம் என்று சொல்லப்படும் உணர்வானது எல்லாவுயிர் களுக்கும் மனத்தொடு பொருந்திவரும் விருப்பத்தை அடிப் படையாகக்கொண்டு தோற்றுவது என்பர் ஆசிரியர். எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர்மாட்டும் இன்பம் உளதா மெனவும் மனம் பொருந்தாதவழி மனவியர்மாட்டும் இன்ப