பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 149 வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளே இறைச்சியென வழங்குவது தமிழ்மரபு, “இறைச்சிப் பொருள் என்பது உரிப் பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள். அஃதாவது கருப்பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது" என்பர் இளம் பூரணர். இத்தகைய இறைச்சிப்பொருள் பெரும்பான்மையும் அகப்பொருளொழுகலாற்றில் தலைவனது கொடுமைகூறும் வழிப் பிறப்பத்ென்றும், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப் பட்டு அப்பொருட்கு உபகாரப்படும் பொருட்டன்மையினை யுடைய தென்றும் கூனுவர் நச்சிஞர்க்கினியர். இறைச்சிதானே யுரிப் புறத்துவே என இளம்பூரணரும், இறைச்சிதானே பொருட் புறத்ததுவே என நச்சினர்க்கினியரும் பாடங்கொண்டனர். இறைச்சிப் பொருளாகிய இதன் கூறுபாட்டினை ஆழ்ந்து உணரவல்லார்க்கு வெளிப்படக் கூறப்படும் பொருளின் புறத்த தாகி வரும் அவ்விறைச்சியினுள்ளே உட்பொருளாகத் தோன்றும் வேறுபொருள்களும் உள என்பர் ஆசிரியர். எனவே இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக்கிடப்பனவும் கிடவாதனவும் என இருவகைப்படும் என்பர் இளம்பூரணர். கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலேயன்றி, அக் கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; அஃது உள்ளுறை யுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்கு மிடத்து, அவ்வுள்ளுறையுவமம் அன்று இஃது இறைச்சியென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு என இறைச்சிப் பொரு ளின் கூறுபாட்டினைச் சிறிது விரித்து விளக்குவர் நச்சிஞர்க் கினியர்." 1. இறைச்சிப் பொருளேக் குறித்து இளம்பூரணரும் நச்சிகுர்க் கினியரும் கூறிய உரை விளக்கத்தினேயும் மேற்கோனாகக் காட்டிய பாடல்களின் பொருளமைதியினையும் கூர்ந்து நோக்குங் கால், இறைச்சிதான் வெளிப்படக்கூறிய பொருட்கு உபகர்ரப்படும் அளவில் பொருட் புறத்ததாகி வருவதும், அவ்வளவிலன்றிப் பிறிது