பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் 153 உடனுறையாவது, நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத் துடன் உறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத் துக்கூறும் இறைச்சி. உவமமாவது அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும். நகையும் சிறப்பும் பற்ருது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும், அன்புறுதகுந இறைச்சி யுட் சுட்டி வருவனவும் சுட்டெனப்படும். நகையாவது ஒன்று நினைந்து ஒன்று கூறுதல். ஏனையுவமம் நின்று, உள்ளுறையுவ மத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நிற்பது சிறப்பு என்னும் உள்ளுறையாம். இவை ஐந்தும் ஒன்றன. உள் ளுறுத்தி அதனை வெளிப்படாமற் கூறுதலின் உள்ளுறை யெனப் பட்டன என்பர் நச்சினுர்க்கினியர். முடிவில்லாத சிறப்பினையுடைய அகப்பொருள் ஒழுகலாற்ருல் ஆகிய இன்பமனைத்தும் இத்தகைய உள்ளுறைப் பொருண்மை யிலே விளங்கித் தோன்றும்படி செய்த சிறப்பும் முன்னைச் சான்ருேர் வகுத்துரைத்த பண்புடைய சொல்லாடல் முறையால் விளைந்ததே என்பது ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தாகும். தலைவன் தன் தன்மை யென்பதொன்றின்றி நந்தன்மை யெனக் கருதுதலின், யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பமெனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் நிலையிற் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் இவை இன்பந்தரும் என்றே ஏற்றுக் கொள்வானதலால் இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் தலைமக்களது இன்பவுணர்வு வளர்ந்து சிறத்தல் காணலாம். 1. தொல்-பொருளியல் 49-ம் சூத்திரம், நச்சினர்க்கினியர் 盛°一@愿”。