பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தொல்காப்பியம் நுதலியபொருள் மங்கலத்தாற் கூறுஞ் சொல்லும், இடக்கரடக்கிக் கூறுஞ் சொல்லும், குற்றமற்ற ஆண்மை காரணமாகச் சொல்லிய மொழியும் ஆகிய இவையெல்லாம் சொல்லாற் பொருள் படாமை யால் முற்கூறிய உள்ளுறையின்கண் அடங்கும் என்பர் ஆசிரியர். தலைமக்களுக்கு ஆகாதனவென்று மெய்ப்பாட்டியலில் விலக்கப்படும் சினம், பேதைமை, பொருமை, வறுமை ஆகிய நான்கும் யாதானு மொரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக அவர்பாற் சார்த்தியுரைக்கப்படும். அன்னை என்ற சொல்லால் தோழி தலைவியையும் தலைவி தோழியையும் அழைத்தலும், என்னை என்ற சொல்லால் அவ் விருவரும் தலைவனை அழைத்தலும் உள. இச்சொல் வழக்குகள் சொல்லிகுலும் அதற்குறுப்பாகிய எழுத்தினுலும் பொருள் தோன்ருத மரபினையுடையன என்பர் ஆசிரியர். ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என இங்ங்ணம் வரும் சொல் லெல்லாம்,நாட்டில் வழங்குகின்ற வழக்கியல் மரபினலே பொருளை மனத்தினுல் உணரினல்லது இதனது வடிவம் இதுவெனப் பொறிகளால் தானும் உணர்ந்து பிறர்க்கும் தெரியக் காட்ட முடியாதனவாகிய பிழம்பில்பொருள்களை உணர்த்துவனவாகும். இமையாக் கண்களையுடைய தேவருலகிலும் கடல்சூழ்ந்த இந் நிலவுலகத்திலும் மேற்குறித்தனவாகிய அப்பொருள்கள் இல்லாத காலம் என்பது இல்லாமையால் (எக்காலத்தும் உள்ளமையால்) ஒப்பு முதல் நுகர்வு ஈருகச் சொல்லப்பட்ட அவை யாவும் கட்புலகிைய வடிவமில்லாதனவாயினும் என்றும் உள்பொருள்க ளெனவே கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர். இங்ங்னம் ஆசிரியர் தொல்காப்பியனரால் ஒப்பு முதலாக எடுத்துரைக்கப்பட்ட இப்பொருள்களை உண்மை மாத்திர