பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 தொல் காப்பியம் நுதலிய பொருள் 'ஒன்பது சுவையுள் உருத்திரம் ஒழித்து ஒழிந்த எட்டனையுங் கூறுங்கால், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணிரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறு பாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச் சுவை யெட் டோடுங் கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்திரண்டாம்" என்பதும், எனவே சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலும் என நான்கு வகைப்பட்டு நிகழும் இம்முப்பத்திரண்டு பொருள்களையே பண்ணைத் தோன்றிய எண்ணுன்கு பொருளும் என இச்சூத்திரத்தில் தொல்காப்பியனர் குறித்தனர் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். இனி, சூத்திரத்திலுள்ள பண்ணை என்ற சொல்லுக்குத் 'தொகுதி எனப் பொருள்கொண்டு,எள்ளல்,இளமை, பேதைமை, மடன் என்ருற்போல நந்நான்காய்ப் பண்ணைகூடிவரும், முப்பத் திரண்டு பொருளும் என விளக்கங் கூறுதலும் உண்டு.” நகை, அழுகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள்களை நாடக அரங்கிலே நிறுத்தி, அவற்றைக் கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுத்தி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமை யெல்லாம் நாடக வழக்கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதி யெல்லாம் இயற்றமிழ் நூலில் உணர்த்தத்தக்கன அல்ல எனக் தோன்ரு நின்ற பொருட் பகுதிகளான் ஒன்றை நான்காகச் செய்து மாற முப்பத்திரண்டாம் (அகத்தினேயியல்-205) என வரும் இலக்கண விளக்கவுரைப் பகுதி, மேற்காட்டிய இளம் பூரண ருரையை அடியொற்றியதாகும். 1. உருத்திரம்-வெகுளி, கோபம் 2. நாவலர் திரு. ச. சோத, கரபாரதியார் எழுதிய தொல் காப்பியப் பொருட்படலம், மெய்ப்பா டியல், முதற் சூத்திரவுரை.