பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் 159 கருதிய தொல்காப்பியனர் மெய்ப்பாடு பற்றிய நாடகநூற் கோட்பாடுகளைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொகுத்துச் சுட்டினர்." நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடுதற்கமைந்த புலனெறி வழக்குப் பற்றித் தாம் உணர்த்த எடுத்துக்கொண்ட மெய்ப்பாடுகளை இவ்வியலிலுள்ள ஏனைய சூத்திரங்களால் விரித்து விளக்குகின்ருர், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் ஆசிரியர். இங்கே கூற எடுத்துக்கொண்ட எண்வகை மெய்ப்பாடுகளும் முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினேர் நாடக மகளிர் முதலியோர் நிகழ்த்தும் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒருவாற்ருல் தொடர்புடையனவே என்பார், விளையாட்டுப் பொருளினதாகிய நகையென்னும் மெய்ப்பாட்டை முதற்கண்வைத்தார். நகைக்கு மறுதலையாவது அழுகையாதலின் அதனை அதன் பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத்தார். தாம் இளிவந்த நிலையில்:தம்மினும் உயர்ந்தவற்றை யெண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின்பின் மருட்கை வைத்தார். வியப்பாகிய மருட்கை பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தார். அச்சத்திற்கு மறுதலை வீரமாதலின் அச்சத்தின்பின் வீரத்தை வைத்தார். வீரத்தின் பயனுகப் பிறப்பது வெகுளியாதலின் வீரத்தின்பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லாச் சுவைகளினும் சிறந்ததாதலானும் முதலிற் கூறிய நகை யுடன் தொடர்புடையதாதலானும் உவகையை இறுதிக்கண் வைத்தார் என நகைமுதல் உவகையிருகவுள்ள எண்வகை 2. தொல்-மெய்ப்பாட்டியல் 2-ம் சூத்திரம் பேராசிரியர் உரை.