பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் #51 இருவகைப்படும். இவ்வாறே தன்கண் தோன்றிய மடமை காரண மாகவும் பிறர் கண்தோன்றிய மடமை காரணமாகவும் நகை தோன்றுமாதலின் மடமை பற்றிய நகையும் இருவகைப்படும் என்பர். இளிவு, இழவு. அசைவு, வறுமை என இந்நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றும். இவற்றுள் இளிவு என்பது பிறரால் இகழப்படடு எளியராதல். இழவு என்பது தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல், அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை யென்பது போகந் துய்க்கப்பெருத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம் ஆதலின் இவையும் எட்டாயின என்பர் பேராசிரியர். தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகையென்றும் பிறர்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணையென்றும் கூறுதல் மரபு.’ மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இந்நான்கு பொருள் பற்றி இளிவரல் தோன்றும். முப்பு-முதுமை காரணமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி-நோய், வருத்தம்-பயன் விளையாத வீண் முயற்சி. மென்மை-ஆற்றலும் பொருளும் இன்றி எளியராம் நிலைமை. இவை நான்கும் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாதலுடைய. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என இந்நான்கு பொருள்பற்றி மருட்கை தோன்றும். புதுமை-புதிதாகக் கண்டது: பெருமை-மிகப் பெரியது. சிறுமை-மிக நுண்ணியது. ஆக்கம்ஒன்று திரிந்து ஒன்ருகியது. இந்நான்கும் முற்கூறியன போலத் 1. தொல் மெய்ப்பாடு, 5 ம் சூத்திரம், பேராசிரியர் உரை நோக்குக.