பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i52 தொல்காப்பியம் நுதலியபொருள் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டா வன. உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் அறிவினைத் திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் மெய்ப்பாடாதலின் அதனை மதிமை சாலா மருட்கை' என அடைபுணர்த்தோர்ை ஆசிரியர். எனவே திரியின்றி இயல்பாகிய அறிவுடன் கூடிய நிலையில் மருட்கை தோன்றுதற்கு இடமில்லை யென்பது புலம்ை. அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என இந்நான்கு பொருள் பற்றி அச்சம் தோன்றும். அணங்காவன எதிர்ப் பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய் பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முதலாகவுள்ள கொடிய விலங்குகள். கள்வராவார் சோர்வு பார்த்து வஞ்சித்துக் கொடுந்தொழில் புரிவோர். தம் இறையென்றது தந்தை ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற் பணிகொண்டு தம்மை ஆளும் தலைவரை அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இங் வனம் நடுங்காது பிணங்கி நிற்பாரது மனத்தில் அச்சம் தோன் றுவதில்லை யென்பார் பிணங்கல் சாலா அச்சம் என்ருர். அச்சத்திற்குக் காரணமாகிய இவை நான்கும் தன்கண் தோன் றுவன பிறர்கண் தோன்றுவன என இருபாற்படாது பிறிது பொருளென ஒருபாற்பட்டே நிற்பனவாம். கல்வி, தறுகண், இசைமை கொடை என்ற இந் நான்கும் காரணமாகப் பெருமிதம் தோன்றும். பெருமிதமாவது எல்லா ரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் என்பர் பேராசிரி யர். எனவே அறிவு ஆண்மை பொருள் முதலிய சிறப்புக்களால் மக்கள் எல்லாரோடும் ஒப்பநில்லாது உயர்ந்து நிற்றல் பெரு மிதம் எனக் கொள்ளுதல் பொருந்தும். கல்வி என்பது தவம் முதலாகிய செயலின் திறம். தறுகண் என்பது உள்ளத்து உறுதியாகிய வீரம். இசைமை என்பது எக்காலத்தும் பழியொடு