பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் 163 வருவன செய்யாமையாகிய புகழ்த்திறம். கொடை என்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளுங் கொடுத் தலாகிய வண்மைத் திறம். இவை நான்கும் ஒருவர்பால் அமைந்த நிலையில் அவரிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்ருர் பேராசிரியர். உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற இந்நான்கும் பற்றி வெகுளி தோன்றும். உறுப்பறையாவது கையை வெட்டு தலும் கண்ணைத் தோண்டுதலும் போன்ற கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் உயர்வுக்கும் அவ. ருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல். அலே என்பது அரசியல் நெறிக்கு மாருகக் கோல்கொண்டு அலைத்தல் முதலிய தீத் தொழில்கள். கொலை என்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைகளை அழித்துப் பேசுதல். இங்ங்ணம் நால்வகைப் படக் கூறப்பெற்ற இக் கொடுந்தொழில்கள் காரணமாக மக்களது மனத்தே வெகுளி தோன்றுதல் இயல்பு. இவ்வெகுளி பிறர்கண் தோன்றிய பொருள்பற்றி வருவதாகும். செல்வம், புலன், புணர்வு விளையாட்டு என்ற இந்நான்கும் காரணமாக உவகை தோன்றும், செல்வம் என்றது செல்வத் தால் உண்டாகும் நுகர்ச்சியின. புலன் என்றது கல்விப் பயணுகிய அறிவுடைமை. புணர்வு என்றது அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமப் புணர்ச்சியின. விளையாட்டென்றது யாறும் குளமும் சோலையும் முதலாகிய வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணை யொடு விளையாடி மகிழும் விளையாட்டின. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை பிறக்கும். உலகியல் வாழ்விற் பிறரது துன்பத்தினைக் கண்டு கீழ் மக்களடையும் போலி மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது