பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 4 தொல்காப்பியம் நுதலியபொருள் என அறிவுறுத்தும் நோக்கத்துடன் அல்லல் நீத்த உவகை என அடைபுணர்த்தோதிய ஆசிரியரது புலமைத்திறன் உணர்ந்து பாராட்டத் தகுவதாகும். மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டும் ஒரு பக்கமாக, மற்ருெருபக்கம் உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெருஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொருமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என வரும் இம்முப்பத்திரண் டும் உளவாவன. இவை மேற்கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடு களுள் அடங்காத நிலையிலேதான் தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர்." இங்ங்னம் இவ்வியலில் 3 முதல் 12 வரையுள்ள சூத்திரங் களால் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடுகளை வகுத்துரைத்த ஆசிரியர் 13 முதல் 25 முடிய வுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கே சிறப்புரிமையுடைய மெய்ப் பாடுகளை விரித்து விளக்குகின்ருர். அகத்திணையுள் களவென்னும் ஒழுகலாற்றிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடுகளைக் கூறத் தொடங்கிய தொல்காப்பியனுர், புணர்க்கும் பாலாகிய நல்லுழின் ஆணையால் அன்பிற் சிறந்தாராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப் பட்ட வழி, அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சி யளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும், அவ்விருவரும் மெய்யுற்றுக் கூடிய புணர்ச்சிக்குப் பின் மறைவில் நிகழும் ஒழுகலாருகிய அக்களவு வெளிப்படுமளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும், இவையாறும் ஒவ் 1. எனவே, இவை அம் முப்பத்திரண்டுள் அடங்கியவழி அவற்றின் அங்கமாகக் கொள்ளத்தக்கன என்பது ஆசிரியர் கருத் தாதல் நன்கு புலம்ை.