பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் $65 வொன்றும் நந்நான்கு பகுதிகளையுடையவாகி ஒன்றன்பின் ஒன்ருய் முறையே தோன்றுமெனவும் விரித்துரைக்கின்ருர். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குதற்கண் தலைவி மாறுபடாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி புகுமுகம் புரிதல் எனப்படும். இவ்வாறு தலைவன் தன்னை நோக்கிய நிலையில் அச்சமும் நானும் ஒருங்கு வந்தடைதலால் வியர்வை யரும்பிய நெற்றியையுடையளாதல் பொறிநுதல் வியர்த்தல்' என்னும் மெய்ப்பாடாம். அதன் பின்னர்த் தலைவனிடத்தே தோன்றிய குறிப்புக்களால் அவனுடன் அளவளாவி மகிழவேண்டு மென்ற விருப்பம் தன்னுள்ளத்தே தோன்றிய நிலையிலும் அவ் விருப்பம் புறத்தே வெளிப்படாதபடி மறைத்தல் நகுநய மறைத் தல் எனப்படும். இங்ஙனம் தலைமகள் தனது விருப்பத்தினை மறைத்தாளாயினும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாதலால் தன் சிதைவு புறத்தார்க்குப் புலனுகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயல்பாம். அத்தகையமுயற்சி சிதைவு பிறர்க்கின்மை, என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட இந்நான்கு மெய்ப்பாடுகளும் களவிற் குரிய முதற்கூருகும் என்பர் ஆசிரியர். மேற்குறித்த வண்ணம் தலைமகள் தனது மனச்சிதைவினைப் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்த வழியும், உள்ளநெழ்ச்சி யாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன் வயத்ததன்றி நெகிழ்ந்து தாழ்தல் :கூழை விரித்தல், எனப்படும். கூந்தலைப்போலன்றிக் காதிடைப் பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றென்று நெகிழ்ந்து வீழ்தல் காதொன்று களைதல் என்னும் மெய்ப்பாடாகும். தனது உடம்பின் வேறுபாடுணர்ந்த தலைமகள் தோடுபோல நெகிழப் பெய்யப்படு முறைமையினவன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய கைவளை, மோதிரம்