பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் நுதலியபொருள் முதலிய அணிகலன்களைக் கழன்று விழாதபடி இறுகச் செறித்துக் கொள்ளுதல் ஊழணிதைவரல் எனப்படும். தனது உடம்பின் நெகிழ்ச்சியையுணர்ந்த தலைமகள் தான் உடுத்த உடையினைப் பல முறையும் இறுக உடுத்துக்கொள்ளுதல் உடைபெயர்த்துடுத்தல் என்னும் மெய்ப்பாடாம். இம் மெய்ப்பாடுகள் நான்கும் களவிற் குரிய இரண்டாங்கூறென்பர் ஆசிரியர். தலைவியின் உள்ளச் சிதைவறிந்து தலைவன் அவளே மெய்யுற அணுகிய நிலையில் நிகழ்வன இம்மெய்ப்பாடுகளாதலின் இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப்பட்டன. முற்கூறியவாறு உடை பெயர்த்துடுத்த தலைமகள், உடை பெரிதும் நெகிழ்ந்த நிலையில் தன்கையால் அற்றம் மறைத்தல் 'அல்குல் தைவரல் எனப்படும். அதனைச்சார இடையில் அணிந்த கடி சூத்திர முதலியவற்றை நெகிழாது திருத்திப் போற்றிக் கொள்ளுதல் அணிந்தவை திருத்தல்' என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறுதன் வலியற்ற நிலையிலும் தலைமகள் தான் புணர்ச்சியை வேண்டா தான் போல்வதோர் வன்மையை மேற்கொண்டு நிற்றல் இல்வலியுறுத்தல்' எனப்படும். (இல்லாத வன்மையை மிகுத்தல் என்பது இத்தொடரின் பொருளாகும்.) இங்ங்ணம் தலை மகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையிஞலும் தடுக்கப்படாது நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இருகை களும் தலைவனே முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவன போல்வ தோர் குறிப்புடையளாதல் இருகையும் எடுத்தல்' என்னும் மெய்ப்பாடாகும். இவை நான்கும் களவின் முன்ரும் கூறென்பர் ஆசிரியர். மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டும் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்திற்கு முன்னே நிகழ் வனவாம். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி தனது மனக் கருத்தினை நானும் நிறையுமாகிய குணங்களால் புறத்தார்க்குப் புலகைாது மறைக்கும் நிகழ்ச்சி பெண்மையின் இயல்பாதலால்