பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் #67 இங்கே கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெருபான்மையும் தலைமகள் கண்ணே சிறந்து நிகழும் என்பர் பேராசிரியர். புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையை நினைந்து தலைவி பாராட்டும் உள்ளக் குறிப்பினளாதல் பாராட் டெடுத்தல்' எனப்படும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடமை நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்ற உரையாடுங் குறிப்பினளாதல் மடந்தய வுரைத்தல்' என்னும் மெய்ப்பாடாம். இவ்வொழுக்கம் சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறும் கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக் கொண்டு இது புறத்தார்க்குப் புலனுகுமோ என நானும் உள்ளக் குறிப்பினளாதல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் எனப்படும். தலைமகன் அன்பினுற் கொடுத்த கையுறைப் பொருள்களை மறுக் காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ளமுடைய ளாதல் கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடாம். இங் ங்ணம் முறையே ஒன்றன்பிளுென்ருகத் தோன்றுதற்குரிய இவை நான்கும் களவின் நான்காம் கூறென்பர் ஆசிரியர். உயிரினுஞ் சிறந்த நாணுடையளாகிய தலைமகள், தன்னைக் குறித்து அயலார் கூறும் பழிச்சொற்களுக்கு நாணி, இவ் வொழுகலாற்றினை நம் பெற்ருேர்க்குத் தெரிவிப்போமா அன்றித் தெரிவியாதிருப்போமா எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து, தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்தன்மைக் கும் ஏற்றவகையால் சொல்ல வேண்டுவனவற்றைத் தெரிந்து கொண்டு இன்னவாறு நிகழ்ந்ததென்று தன்தோழிக்கு உடம் படுதலும் அவள் வழியாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் தெரிந்துடம்படுதல் எனப்படும். தலைவனுடன் முன்னர்ப் பலநாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாறு போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பாகிய அச்சமும் நாணமும் மடனும் காரணமாக மறுக்கும் குறிப்பினளாதல் திளைப்பு வினை மறுத்தல்' என்னும் மெய்ப்பாடாம். தலைமகள் பெற்றேரால்