பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் 169 வைத்தார். தலைமகன்பால் தோன்றும் குறிப்புச் சில பற்றித் தலைமகள்பால் பல குறிப்புத் தோன்றுமாதலால் தலைமகளிடத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளே சிறந்தனவென்று இங்கு வரையறுத் துரைக்கப்பட்டன. மேற்சொல்லப்பட்ட அறுவகைக் கூற்றினவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும் நிலைப்பட்ட அவை தமது உட்பகுதியாகி வருவன பிறவும் நிலைபெற்ற ஒழுகலாருகிய நடுவணை ந் திணைக்கேயுரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகளாகும் என்பர் ஆசிரியர், 'மன்னிய வினை’ எனப்பட்ட புணர்ச்சி, தலைமகளுக்கு ஆற்ருமை நேர்ந்தவிடத்து மேல் அறுவகைப்படக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளை முறையே நிமித்தமாகக் கொண்டு வாராமையும் உரித்து என்பர் ஆசிரியர். களவிற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலாங்கூறு முதல் ஆருங்கூறு முடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் எனவும், அவற்றின் பின் உளவாம் உன்மத்தம், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு எட்டு ஒன்பது பத்தாம் அவத்தைகள் எனவும் பகுத்துரைப் பர் இளம்பூரணர். பிற்கூறிய நான்கும் அகனந்திணை யின்பத் திற்கு உரியன அன்மையின் இவற்றையுஞ் சேர்த்துப் பத்தவத்தை களென ஆசிரியர் வரையறை கூருதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாகும். மேற்கூறிய இருபத்து நான்கு அல்லாதவழி இனிக் கூறு கின்ற மெய்ப்பாடுகளும் உளவாம். இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்களைக் கண்டநிலையில் அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதலும், தாளுெருத்தியே துன்புறுகின்ருளாகச் சொல்லு