பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#70 தொல்காப்பியம் துதலியபொருள் தலும், தலைவனும் அவனுடைய தேர் முதலாயினவும் தன்னெதிர் தோன்றுவனவாக முன்னிறுத்திக்கொண்டு வருந்துதலும், கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவற்றையும் ஆராய் தலும், பசிநோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உணவூட்டியபொழுதும் முன்போலாது உணவினைக் குறைத்துக் கொள்ளுதலும், உணவின்மை காரண மாக உடம்பு பெரிதும் இளைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உறக்கத்தை மேற்கொள்ளாமையும், சிறிது உறக்கம் வந்த நிலையில் தலைவனைக் கனவிற்கண்டு மயங்குதலும், மெய்யைப் பொய்யாகக் கொள்ளுதலும், பொய்யை மெய்யென்று துணித லும், தலைவர் நம்மைத் துறப்பரோ என ஐயுறுதலும், தலைவனுக்கு உறவாயினரைக் கண்டு மகிழ்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றிப் பரவுதலும், அங்ங்ணம் உரைக்குங்கால் நெஞ்சழிந்து கூறுதலும், யாதாயினும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத் தலை மகளுேடு ஒப்புமை கொள்ளுதலும், அவ்வழி ஒப்புமையுண்டாகிய நிலையில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழ்தலும், கலக்கமுற்றுரைத்தலும் என வரும் இவை புணர்ச் சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டினும் இவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சி நிமித்தமேயாகும் என்பர் ஆசிரியர். இவை யெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவர் உள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி யுணரப்படுமென்றும், இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள்ளத்து நிகழ்ந்தவற்றை வெளிப்படுப்பன ஆகலான் மெய்ப்பாடெனப்பட்டன என்றும் கூறுவர் பேராசிரியர். களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடாகியவழி இடித்துரைத் தலும், மனத்திலே வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமையும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனும் என்ற அச்சம் காரணமாகத் தலைவனை நீங்கியொழுகலும், இரவும் பகலும் தலைவனெடு அளவளாவுதலை மறுக்குங் குறிப்புடையளாதலும், புள்ளும், மேக