பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் $7. மும் போல்வனவற்றை நோக்கித் தலைவர்பால் என்பொருட்டுத் தூது சொல்லுமின் என இரந்துரைத்தலும், மனையகத்திற் பொய்த்துயிலொடு மடிந்துவைகுதலும், காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பும், உரையாடாது வாளா இருத்தலும் என எண்ணப்பட்ட இவை எட்டும் திருமணம் முடித்து எய்துதலால் என்றும் அழியா நிலைமைத்தாகிய கற்புக் கூட்டத் திற்கு நிமித்தமாகிய மெய்ப்பாடுகளாகும். தலைமகனுக்குத் தொழுகுலமாகிய தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சியொழுகும் ஒழுக்கமும், தனக்கு ஒத்த இல்லறம் இன்ன தென்று தலைமகளது உள்ளத்தே படுதலும், களவொழுக்கத்திற் போலன்றித் தலைமகன்யால் இல்லாத குற்றத்தை ஏறிட்டுக் கொண்டு வெகுளலும், தலைமகனுற் பெற்ற தலையளி உண்மையே யாயினும் அதனை உண்மையென்று தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சியும், புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சியும், களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் என வரையறுத்தாற் போல்வதோர் வரையறை கற்புக்கு வேண்டாமையால் அப் பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமும், களவுக்காலத்துத் துன்பமுற்ருற் போலன்றி அருள்மிகத் தோன்றிய நெஞ்சினளாதலும், களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் மனையறத்தின்மேற் பெருகிய விருப்பினலே ஒருசேரத் தொக நிற்றலும், களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமையும், தலைவனது மறைந்த ஒழுக்கத்தைப்பற்றி அயலார் கூறிய புறஞ்சொல்லின் தீமை குறித்து எழுந்த சொல்லுடன் சேர இங்கு எடுத்துரைத்த பத்தும் அழிவில் கூட்டம் என மேற்கூறிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடுகளாகும். காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதற்குரிய தலைவனும் தலைவியும் ஆகிய இவ்விருவர்பாலும் குடிப்பிறப்பு,