பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொல்காப்பியம் என இறையனர் தெரிவித்துள்ளார். களவியலுரையாசிரியரோ 'இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது' எனக் கூறுகின்றர். "மக்கள் நுதலிய அகனைந்திணை' என ஆசிரியர் தொல்காப்பியனர் கூறுங் கருத்தினையே இறையனரும் தம் நூலிற் குறித்துள்ளார். இங்ங்ணமே இறையனர் தம் நூலகத்து எடுத்தாண்ட தொல்காப்பியச் சூத்திரப் பகுதிகளின் உரையிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை யீண்டு விரிப்பிற் பெருகுமாதலின் இருநூல்களையும் அறிஞர் ஒப்பு நோக்கியுணரற் L苷GU开町。 தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெருமக்கள் இறையனர் அகப்பொருளுக்கு முதல் நூலாக விளங்குந் தொல்காப்பியம் கடைச் சங்கத்திறுதிக் காலத்திற் பாண்டி நாட்டிற் பயிற்சி குன்றியதென்பதனையே மேற்காட்டிய களவிய லுரையின் வரலாறு தெளிவுபடுத்துகின்றது. பிற வேந்தர் படை யெடுப்பின் காரணமாகத் தோன்றிய அரசியற் குழப்பங்களாலும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வருத்திய பஞ்சக் கொடுமையிலுைம் மக்கள் தமிழ் வளர்ச்சியிற் சோர்வுற்றமை யால் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்தின் பயிற்சியும் நாளடைவில் குன்றுவதாயிற்று. அயலாரது கூட்டுறவால் உருத் திரியும் நிலையையும் எய்தியது. தமிழ் மக்களின் தொன்மை நாகரிகத்தொடு பொருந்தாத கருத்துக்கள் சிலவும் நூலுள் இடையிடையே ஏற்றியுரைக்கப்படுவன வாயின. இங்ங்ணம் நூலின் பொருளமைதி பிற்காலத்தில் மாறுபட்டு முழுவதும் புலனுகாது மறைந்த இடர்நிலையில் தொல்காப்பியம் முழுமைக் கும் முதன் முதல் உரைகண்ட பெருமை உரையாசிரியராகிய இளம்பூரண அடிகளுக்கே யுரியதாகும். இளம்பூரண அடிகளைப் தொல்காப்பிய மரபியல் 94 ஆம் சூத்திரத்திற்குப் பேராசிரியரெழு திய உரைப்பகுதியால் உய்த்துணரப்படும்.