பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 重73 படுதலும் இயல்பாதலால் அவ்வேறுபாடுகளுக்கு ஏதுவாயமைந்த அவற்றை முறையே கண்ணுலுஞ் செவியாலும் உணர்ந்துகொள் ளுதல் அவ்வத் துறைபோயினரது ஆற்றல் என இதல்ை ஆசிரியர் உய்த்துணர வைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்க தாகும். உவமவியல் உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். காட்டகத்தே திரியும் ஆமா என்ற விலங்கினைக் கண்டறியாதா ளுெருவன், அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினையின், ஆவினைப் போன்றது ஆமா என அவனுக்குத் தெரிந்த பசுவை ஒப்புமையாகக் காட்டி உணர்த்துதல் மரபு. அவ்வொப்புமையைக் கேட்டறிந்த அவன், பின்னெரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை நேரிற் கண் டானுயின் ஆமா இதுவே என உணர்ந்து கொள்வான். இவ் வாறு பிறிதொன்றை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக் கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமை யெனப்படும். இவ்வுவமையினைக் கருவியாகக் கொண்டே இரு திணைப் பொருள்களும் வழக்கினுள் நன்கறியப்படுவன. ஆதலால் இருவகை வழக்கினும் நிலைபெற்று வழங்கும் உவமையின் இலக் கணத்தினை ஆசிரியர் தொல்காப்பியனுர் இவ்வியலில் விரித்துக் கூறுகின்ருர். அதல்ை இஃது உவமவியல் என்னும் பெயர்த்தா யிற்று. மேல், குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறிஞர்; இது பண்புந்தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது'