பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 73 தொல்காப்பியம் நுதலியபொருள் கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலைக்களம் காதல் என்பது நன்கு புலனும். "அரிமா வன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன்" (பட்டினப்-298,299) என்பது, திருமாவளவனகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறிய தாகலின் இவ்வுமைக்கு நிலைக்களம் வலி என்பது இனிது விளங்கும். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறவே, இவற்றை ஆதார மாகக் கொண்டன்றி எத்தகைய உவமும் பிறவா தென்பது கருத்தாயிற்று. ஒரு பொருளின் இழிபு கூறுவார், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடு பொருள் எனப்படும் அவ்விழியும் உவமத்தின் நிலைக்களங்களுள் ஒன்ருகக் கொள்ளப்படும். கிழக்கிடு பொருள்-கீழ்ப்படுக்கப்படும் பொருள். "அரவு நுங்கு மதியின் துதலொளி கரப்ப" (அகம்=313) என்புழி, பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலைமகளது துதல் ஒளியிழந்த நிலையினைக் கூறுவார், இராகு வென்னும் பாம்பினுல் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களே அதற்கு உவமை கூறின மையின், இது கிழக்கிடுபொருள் நிலைக்களமாகப் பிறந்த உவமையாகும். சிறப்பு, நலன், காதல், வலி என முற்கூறிய நான்கிைேடு கிழக்கிடு பொருளாகிய இதனையும் சேர்த்து, உமவத்தின் நிலைக்களம் ஐந்தெனக் கொள்ளுதலும் பொருந்தும் என்பர் ஆசிரியர். முதலும் சினையும் எனக்கூறப்படும் இருவகைப் பொருள் களுக்கும் கருதிய மரபினல் அவற்றிற்கு ஏற்றவை உவமையாய் வருவதற்கு உரியன. எனவே,